ரூ.20 ஆயிரம் கூட இல்லைங்க.. விலை குறைவு தான்.. தரமான டாப் 5 சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்கள் இவை..

First Published Apr 28, 2024, 7:17 PM IST

ரூ.20 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் சிறந்த வசதிகளுடன் கூடிய பிரபல பிராண்டுகளின் சிறந்த ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

5G Mobiles Under 20000

ரெட்மி நோட் 13 5ஜி (Redmi Note 13 5G) ஸ்மார்ட்போன் மீடியா டெக் டைமன்சிட்டி 6080 சிப் செட் மூலம் சிறப்பாக செயல்படுகிறது. அழகான புகைப்படங்களை எடுக்க 108 எம்பி முதன்மை சென்சார், செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளை எடுப்பதற்கு 16 எம்பி முன்பக்க கேமராவுடன் 2 எம்பி டெப்த் சென்சார் உள்ளது. இதன் 5000 எம்ஏஎச் பேட்டரி ஃபோனை நீண்ட நேரம் வேலை செய்யும். 33W சார்ஜர் மூலம் மிக வேகமாக சார்ஜ் செய்ய முடியும்.

Realme Narzo 70 pro 5G

ரியல்மி நார்சோ 70 ப்ரோ (Realme Narzo 70 pro 5G) 6.7 இன்ச் முழு HD+Amoled டிஸ்ப்ளேவுடன் வருகிறது. MediaTek DiamondCity 7050 செயலி, Mali G68M C4 GPU உடன் வருகிறது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு திறன் கொண்டது. கேமராவைப் பொறுத்தவரை, 50 எம்பி சோனி பிரைமரி சென்சார், 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ ஷூட்டர் மற்றும் 16 எம்பி முன்பக்க கேமரா ஆகியவைகொண்டுள்ளது. 67W சார்ஜருடன் வேகமாக சார்ஜ் செய்வதை ஆதரிக்கும் 5000 mAh பேட்டரி நிறுவப்பட்டுள்ளது.

Oneplus nord CE 3 Lite

ஒன்ப்ளஸ் நார்ட் சிஇ லைட் (OnePlus Nord CE lite) போனில் 6.72 இன்ச் LCD டிஸ்ப்ளே, Qualcomm Snapdragon 695 chip set, 8 GB RAM, 256 GB இன்டெர்னல் ஸ்டோரேஜ், அல்ட்ரா வால்யூம் மோட் மற்றும் இதர சிறப்பு அம்சங்கள் உள்ளன. ஆண்ட்ராய்டு 13 இல் இயங்குகிறது. 108 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ லென்ஸ், 2 எம்பி டெப்த் கேமரா மற்றும் 16 எம்பி முன்பக்க கேமரா நிறுவப்பட்டுள்ளது. 67W சார்ஜருடன் வேகமாக சார்ஜ் உடன் வருகிறது. 5000 mAh பேட்டரி உள்ளது. டைப் சி போர்ட், 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் உடன் வருகிறது. பேஸ்டல் லைம், க்ரோமேடிக் கிரே வண்ணங்களில் கிடைக்கும்.

iQOO Z9 5G

ஐகியூ இசட்9 5ஜி (iQOO Z9 5G) மீடியா டெக் டைமன்சிட்டி 7200 சிப் செட் கொண்ட மேம்படுத்தப்பட்ட செயல்திறன் கொண்டது ஆகும். இந்த ஸ்மார்ட் ஃபோன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி சேமிப்பகம் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 1 டிபி வரை விரிவாக்க முடியும். கேமராவைப் பொறுத்தவரை, 50 எம்பி சோனி பிரைமரி சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் செல்ஃபிக்களுக்காக 16 எம்பி முன்பக்க கேமரா நிறுவப்பட்டுள்ளது. 6.7 இன்ச் முழு HD AMOLED டிஸ்ப்ளே மிகவும் தெளிவாக உள்ளது. மேலும், இந்த போனில் தூசி, தண்ணீர் போன்றவற்றில் இருந்து பாதுகாப்பதற்கான வசதிகளும் இவற்றில் உள்ளது.

Tecno Pova 6 pro 5G

டெக்னோ போவா ப்ரோ (Tecno pova pro 5G) 6.78 இன்ச் Full HD, AMOLED டிஸ்ப்ளே இருப்பதால் காட்சி அனுபவம் மிகவும் நன்றாக உள்ளது. இந்த ஆண்ட்ராய்டு 14-அடிப்படையிலான ஃபோன் 108 எம்பி டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. டூயல் டோன் எல்இடி ப்ளாஷ் கொண்ட 32 எம்பி முன்பக்க கேமரா அழகான செல்ஃபி எடுக்க கிடைக்கிறது. இந்த போன் 6000 mAh பேட்டரி மற்றும் 70W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

Bank Locker Rule: வங்கியில் லாக்கர் பயன்படுத்துகிறீர்களா.? இந்த ரூல்ஸ் எல்லாம் மாறிப்போச்சு.. நோட் பண்ணுங்க!

click me!