Toilet Cleaning Tips : ஒரு பைசா கூட செலவில்லாமல் நொடியில் கழிப்பறையை சுத்தமாக பெஸ்ட் டிப்ஸ்!

First Published Apr 30, 2024, 11:33 AM IST

உங்களுக்கு தெரியுமா.. ஐஸ் கியூப்கள் உங்கள் மஞ்சள் கழிப்பறையை வெண்மையாக்கும் மற்றும் அழுக்கு பிடிவாதமான கறைகளை உடனடியாக அகற்றும். அது எப்படி தெரியுமா..?

வீட்டை சுத்தமாக வைப்பது மிகவும் அவசியம். ஆனால், வீடு மட்டும் சுத்தமாக இருந்தால் போதாது, குளியலறையையும் சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். ஒருவேளை உங்கள் வீட்டு குளியலறை சுத்தமாக இல்லாவிட்டால் அதிலிருந்து தொற்று பரவும்.

பொதுவாகவே, பலரது வீடுகளில் மிகவும் அழுக்கான கழிப்பறை இருக்கைகள் தான் இருக்கும். இது நோய் பரவுவதற்கு முக்கிய காரணமாகும். தொடர்ந்து சுத்தம் செய்யாவிட்டால் கழிப்பறை இருக்கைகள் மஞ்சள் நிறமாக இருக்கும். இதனால் அவற்றை சுத்தம் செய்வது மிகவும் கடினம். இந்நிலையில், ஒரு பைசா கூட செலவில்லாமல் கழிப்பறையை சுத்தமாகவும் பளபளப்பாகவும் மாற்றலாம். அதுகுறித்து இப்போது இங்கு பார்க்கலாம்.

கழிப்பறையை பல நாட்கள் சுத்தம் செய்யப்படாமல் இருந்தால் அதில் பிடிவாதமான கறைகள் உருவாகும். மேலும், அதை சுத்தம் செய்வது மிகவும் கடினம். ஆனால், நீங்கள் ஐஸ் க்யூப்கள் மூலம் மஞ்சள் கழிப்பறை கறைகளை மிக எளிதாக சுத்தம் செய்யலாம். வாங்க அது எப்படி என்று பார்க்கலாம்...

இதையும் படிங்க:  வெஸ்டர்ன் டாய்லெட் யூஸ் பண்றீங்களா.? அப்ப மூடியை மூடி  ஃப்ளஷ் செய்யுங்கள்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!

வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐஸ் க்யூப்கள் மூலம் கழிப்பறையை நிமிடங்களில் சுத்தம் செய்யலாம். இதற்கு ஒரு பிளாஸ்டிக் கொள்கலனை எடுத்து அதில், 2 டீஸ்பூன் ஹார்பிக், 3 டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து மரக் குச்சியால் கலக்கவும். பின்னர் ஃப்ரிட்ஜில் இருந்து சில ஐஸ் க்யூப்களை எடுத்து, கழிப்பறைக்குள் போடவும்.

இதையும் படிங்க: பாத்ரூமில் போன் யூஸ் பண்றீங்களா? ஜாக்கிரதை..! கடுமையான ஆபத்து ஏற்படும்...

ஐஸ் கட்டிகளைச் சேர்த்த பிறகு, இந்த கலவையை கழிப்பறைக்குள் சரியாக ஊற்றவும். விரும்பினால் மேலும் ஹார்பிக் சேர்க்கவும். கழிப்பறைக்குள் ஐஸ் கட்டிகளைச் சேர்ப்பதால், கலவையானது கீழே மூழ்காமல், நீண்ட நேரம் கழிப்பறைக்குள் இருக்கும். இதற்குப் பிறகு கழிப்பறையை சரியாக முறையில் ஸ்க்ரப் செய்து சுத்தம் செய்யயுங்கள். இப்போது உங்கள் கழிப்பறை சுத்தமாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!