Lakshmi kubera: குபேரர் அருள் மற்றும் நிறைவான செல்வம் பெற செய்ய வேண்டியவை..வாஸ்து, சாஸ்திரம் கணிப்பு என்ன...?

First Published Jun 29, 2022, 1:33 PM IST

Lakshmi kubera pooja: குபேரர் அருள் மற்றும் நிறைவான செல்வம் பெற செய்ய வேண்டியவை....ஆன்மிகத்தில் பார்வையில், தரித்திரம் உங்களை ஆட்கொள்ளாமல், வீட்டில் செல்வம் என்றென்றும் நிலைத்து இருக்க நாம் லட்சுமி தேவி மற்றும் செல்வத்தின் கடவுளான குபேரரை வழிபடலாம்.

Lakshmi kubera pooja:

வாழ்க்கையில் மகிழ்ச்சி, செல்வம் மற்றும் செழிப்பு பெற  இரவும் பகலும் கடினமாக அனைவரும் உழைக்கிறோம். ஆனால், என்னதான் நாம் கடினமாக உழைத்தாலும், ஏற்ற பலன் கிடைக்காமல், வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய முடியாமல் போகிறது. அப்படி, நேரம்,காலம் நமக்கு கை கொடுக்க வில்லை என்றால் நாம் தெய்வத்தை தான் நம்ம வேண்டி இருக்கும். நாம் உயர்ந்த அடைவதற்கு தெய்வத்தின் அருள் நிச்சயம் வேண்டும். இது போன்ற சூழ்நிலையில், தரித்திரம் உங்களை ஆட்கொள்ளாமல், வீட்டில் செல்வம் என்றென்றும் நிலைத்து இருக்க நாம் லட்சுமி தேவி மற்றும் செல்வத்தின் கடவுளான குபேரரை வழிபடலாம்.

Lakshmi kubera pooja:

அப்படியாக, சில விஷயங்களைத் தவறாமல் கடைபிப்பதன் மூலம், அன்னை லட்சுமி மற்றும் குபேர கடவுள் ஆகியோரின் அருளைப் பெறலாம். குபேரர் பக்தர்களின் செய்கைகளால் மகிழ்ச்சியடைந்து அவர்களுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுக்கிறார் என்று நம்பப்படுகிறது. எனவே, குபேரனை வழிபட்டு உங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி மற்றும் செழிப்புடன் வாழுங்கள். தேவன் குபேரை மகிழ்விக்க, சில எளிய விஷயங்கள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவை என்னென்னெ என்பதை கீழே பார்க்கலாம்.

  மேலும் படிக்க....Sani Peyarchi 2022: மகர ராசியில் நிகழும் சனி பெயர்ச்சி ..ஜூலை 13ல் இருந்து நிம்மதி பெருமூச்சு விடும் ராசிகள்..

Lakshmi kubera pooja:

குபேரன் மற்றும் லட்சுமி தேவியின் ஆசி பெறுவதற்கு செய்யவேண்டியவை...

புத்த மதத்தை சேர்ந்தவர்கள் குபேர பொம்மையை வாங்கி வழிபடுவதை நாம் பார்க்கிறோம். இதை, வீட்டில் வைத்திருப்பதால் குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சி நிலவும் என்பது நம்பிக்கை. இத்துடன், கடன் பிரச்னையும் விலகும் என்பது நம்பிக்கை. எனவே, லாபிங் புத்தா, பைகளை ஏந்தி இருக்கும் குபேர பொம்மை (Laughing Buddha), உலோகத்தால் செய்யப்பட்ட குபேர பொம்மை (Laughing Buddha) ஆகியவற்றை வீட்டில் வைத்திருப்பது மங்களகரமானது.

  மேலும் படிக்க....Sani Peyarchi 2022: மகர ராசியில் நிகழும் சனி பெயர்ச்சி ..ஜூலை 13ல் இருந்து நிம்மதி பெருமூச்சு விடும் ராசிகள்..

குபேரனின் ஆசிகளைப் பெற, நீங்கள் பணம் வைத்திருக்கும் பெட்டகம் அல்லது அலமாரியை வீட்டின் தெற்கு அல்லது தென்மேற்கு  திசையில் வைக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் குபேர தேவரின் அருள் நிலைத்திருக்கும்.

lakshmi kubera pooja


ஒவ்வொரு மாதமும் உங்கள் வருமானத்தில் ஒரு சிறிய பகுதியை நன்கொடையாக கொடுங்கள். தானங்கள் செய்வதன் மூலம், அன்னை மகா லட்சுமி மற்றும் தன் குபேரின் நேரடி ஆசீர்வாதம் கிடைக்கும். இதனுடன், மகிழ்ச்சியும் செழிப்பும் ஒரு நபரின் வாழ்க்கையில் இருக்கும்.

பெண்கள் லட்சுமி தேவியின் வடிவமாக கருதப்படுகிறார்கள்.எனவே, வீட்டுக்குள்ளும், வீட்டிற்கு வெளியிலும் பெண்களை மதிக்கவும்.  பெண்களை அவமரியாதை செய்வதால் அன்னை லட்சுமிக்கு கோபம் வரும்.
 

Lakshmi kubera pooja:

குபேர பொம்மை வைக்கும் திசை:

அதேபோன்று, குபேர பொம்மையை பொதுவாக வீட்டில் எந்த திசையை நோக்கி வைத்து வணங்க வேண்டும் என்பது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. வீட்டின் பிரதான கதவுக்கு முன்னால் குபேர பொம்மை (Laughing Buddha) வைக்க வேண்டும். இதன் காரணமாக, வீட்டில் நேர்மறை ஆற்றல் பரவுகிறது. இது தவிர, வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு இது நல்ல உணர்வை கொடுக்கிறது. வீட்டுக்குள் வரும் அனைவருக்கும் தெரியும் வகையில் வீட்டு வாயில் அருகில் வைக்க வேண்டும். அதே போன்று, சிரிக்கும் புத்தரை படுக்கையறையில் வைக்கக் கூடாது.

  மேலும் படிக்க....Sani Peyarchi 2022: மகர ராசியில் நிகழும் சனி பெயர்ச்சி ..ஜூலை 13ல் இருந்து நிம்மதி பெருமூச்சு விடும் ராசிகள்..

click me!