கோடக் மஹிந்திரா வங்கிக்கு கட்டுபாடுகள் விதித்த ரிசர்வ் வங்கி! விதிகளை மீறியதால் அதிரடி நடவடிக்கை!

First Published | Apr 24, 2024, 11:35 PM IST

விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதும், புதிய கிரெடிட் கார்டுகளை வழங்குவதும் தடை செய்யப்படுகிறது.

kotak mahindra bank

விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதும், புதிய கிரெடிட் கார்டுகளை வழங்குவதும் தடை செய்யப்படுகிறது.

kotak mahindra bank

ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான திருத்த நடவடிக்கை விதிமுறைகளை கோடக் மஹிந்திரா வங்கி தனது ஐடி கட்டமைப்பில் பின்பற்றத் தவறிவிட்டது என்ற ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதனால், தகவல் பாதுகாப்பு குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளது எனவும் ஆர்.பி.ஐ. கூறியுள்ளது.

Tap to resize

kotak mahindra bank

ரிசர்வ் வங்கி விதித்துள்ள இந்த் தடையால் கோடக் மஹிந்திரா வங்கியின் தற்போதைய வாடிக்கையாளர்கள், வாடிக்கையாளர்களின் பணம், வாடிக்கையாளர்களின் சேவை ஆகிய எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்றும் ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தி இருக்கிறது.

kotak mahindra bank

ஆனால், ரிசர்வ் வங்கி எடுத்துள்ள நடவடிக்கை கோடக் மஹிந்திரா வங்கியின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் என்று துறை சார்ந்த வல்லுநர்கள் சொல்கின்றனர்.

குறிப்பாக, கோடக் வங்கியின் பெரும்பான்மையான புதிய வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலமாகவும் மொபைல் சேவை மூலமாகவும் சேர்ந்துள்ளனர் என்பதால் ஆர்.பி.ஐ. விதித்துள்ள தடை உத்தரவு வங்கியின் வளர்ச்சிக்குப் பாதகமானதாக இருக்கும்.

Latest Videos

click me!