உங்க கிட்ட இருக்குற தங்கம் ஒரிஜினலான்னு தெரியுமா? ஈசியா கண்டுபிடிக்கும் வழி இதோ!

First Published | Apr 23, 2024, 8:47 PM IST

உங்களிடம் உள்ள தங்க நகைகள், தங்கக் காசு போன்றவை அசல் தங்கம் தானா என்பதை சோதித்துப் பார்த்ததுண்டா? மிக எளிமையான வழிகளில் உங்கள் சேமிப்பில் உள்ள தங்கம் ஒரிஜினல் தானா என்று தெரிந்துகொள்ளலாம்.

Hallmark Gold

ஹால்மார்க் முத்திரை இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இந்த முத்திரை தங்கத்தின் தூய்மைக் குறிக்கிறது. 24 காரட் தங்கத்தில் இந்த முத்திரை இருக்கும்.

Magnet Test for Gold

தங்கம் காந்தம் அல்ல. எனவே ஒரு காந்தம் அதை ஈர்க்கவில்லை என்றால், அது தங்கமாக இருக்கலாம். இருப்பினும், தங்கம் போல காந்தத்தன்மை இல்லாத மற்ற உலோகங்களும் உள்ளன.

Latest Videos


Density Test for Gold

தங்கத்தின் அடர்த்தி அதிகம். எனவே மற்ற உலோகங்களை விட தங்கத்தை கையில் எடுக்கும்போது அதன் எடையை நன்றாக உணர முடியும்.

Acid Test for Gold

தங்கம் நியூட்ரிக் அமிலத்தால் பாதிப்பு அடையாது. ஆனால் மற்ற உலோகங்கள் அந்த அமிலத்தால் பாதிக்கப்படலாம். இந்த அமில சோதனையில் சேதம் அடைந்தால் அது தங்கம் அல்ல.

Scratch Test for Gold

தங்கம் பிற உலோகங்களை விட சற்று மென்மையானது. எதன் மீதாவது உராயும்போது பாதிக்கப்படலாம். தங்கத்தை செராமிக் பொருளுடன் உரசி சோதித்து அசல் தங்கமா என்று அறியலாம்.

Professional Appraisal for Gold

அருகில் உள்ள நகைக் கடை ஒன்றுக்குச் சென்றும் தங்கம் அசலானதுதானா என்று தெரிந்துகொள்ளலாம். நிபுணர்கள் உங்கள் தங்கத்தை பரிசோதித்து முடிவைச் சொல்வார்கள்.

click me!