நகை பிரியர்களுக்கு ஷாக் தகவல்... சவரனுக்கு ரூ.360 உயர்வு- 50ஆயிரத்தை நெருங்கும் தங்கம்

First Published Mar 19, 2024, 11:23 AM IST

தங்கத்தின் விலையானது சவரன் ஒன்றுக்கு இன்று மட்டும் 360 ரூபாய் உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் விரையில் ஒரு சவரன் தங்கம் 50ஆயிரத்தை தொடும் நிலை உருவாகியுள்ளது. 

தொடரும் தங்த்தின் விலை உயர்வு

தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஒரு வாரத்தில் எப்போதும் இல்லாத அளவாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக நடுத்தர வர்க்க மக்கள் தங்கம் வாங்க முடியாத நிலை உருவாகியுள்ளது. உலக நாடுகளிலையே இந்தியாவில் தான் தங்கத்தின் மீதான ஆர்வம் அதிகமாக உள்ளது. எதிர்கால சேமிப்பிற்காகவும், தங்கள் பெண் குழந்தை திருமணத்திற்காகவும் அதிகமான அளவு தங்கம் வாங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தங்கத்தின் விலையானது சவரன் ஒன்றுக்கு இன்று 360 ரூபாய் உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை என்ன.?

தங்கத்தின் விலையை பொறுத்தவரை 22 கேரட்  தங்கம் ஒரு கிராம் 6135 ரூபாயாக உள்ளது. நேற்றைய விலையை விட கிராமுக்கு 45 ரூபாய் அதிகரித்துள்ளது.  சவரன் ஒன்றுக்கு அதாவது 8 கிராம்  நேற்று 48,720 விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 49 ஆயிரத்து 80 ரூபாயில் எட்டியுள்ளது. 8 கிராம் உடைய ஒரு சவரனுக்கு 360 ரூபாய் தங்கத்தின் விலை ஆனது கூடியுள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் தங்கம் 50ஆயிரத்தை கடக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 

தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்ன.?

இந்தநிலையில் தங்கம் திடீர் விலை உயர்வுக்கு, அமெரிக்காவின் பொருளாதாரம் மற்றும் அமெரிக்க பெடரல் எடுக்கும் முடிவுகள். ரஷ்ய-உக்ரைன் போர் மற்றும் ஈரான்-பாலஸ்தீன போர் போன்று உலக நாடுகளுக்கு நடுவே நிலவும் சிக்கல்கள். இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பாவில் நடக்கவிருக்கும் தேர்தல்கள். இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருக்கும் தங்கத் தேவைகள் ஆகியவற்றின் காரணமாக விலை அதிகரித்து வருவதாக பொருளாதார நிபுனர்கள் தெரிவித்துள்ளனர். 

இதையும் படியுங்கள்

ஆதாரில் இந்த தவறை மட்டும் செய்யாதீங்க.. ஆதார் அப்டேட் செய்யும் போது இதை பார்த்து பண்ணுங்க..

click me!