பெண்களுக்கு ரூ.5 லட்சம் வட்டியில்லா கடன்! திறன் பயிற்சியுடன் கடன் வழங்கும் மத்திய அரசின் திட்டம்!

First Published | Mar 18, 2024, 12:15 AM IST

Lakhpati Didi Yojana: பெண்கள் நலனைக் கவனத்தில் கொண்டு பல திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் முக்கியமான ஒன்று லக்பதி திதி திட்டம். பெண்களுக்கு பல்வேறு திறன்கள் சார்ந்த பயிற்சி அளிக்கப்படுவதுடன் நிதியுதவியும் வழங்கப்படுகிறது.

Lakhpati Didi Yojana

மத்திய அரசு 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி லக்பதி திதி திட்டத்தைத் தொடங்கியது. பெண்களை பொருளாதார ரீதியாக முன்னேற்றுவது தான் இந்த திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்தின் கீழ் மகளிருக்குத் தொழில் பயிற்சியுடன் புதிய தொழில் தொடங்க நிதியுதவியும் வழங்கப்படுகிறது. ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடனாகப் பெற்றுக்கொள்ளலாம்.

Lakhpati Didi Yojana benefits

திறன் பயிற்சியுடன் தொழில் தொடங்கி நடத்துவது பற்றி வணிக ஆலோசனைகளைப் பெறவும் உதவுகிறது. நிதி மேலாண்மை, சந்தைப்படுத்துதல், ஆன்லைன் வர்த்தகம் தொடர்பான வழிகாட்டலும் கிடைக்கும். இதுவரை இந்தத் திட்டத்தின் மூலம் 9 கோடி பெண்கள் பயன் அடைந்துள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்கிறார்.

Latest Videos


Lakhpati Didi Yojana for self-help groups

லக்பதி திதி திட்டத்தில் சேர எளிதாக விண்ணப்பிக்கலாம். 18 முதல் 50 வயதுக்குள் உள்ள பெண்கள் இத்திட்டத்தில் பயன் பெறலாம். சுய உதவிக்குழுவில் உள்ள பெண்கள் தான் இந்தத் திட்டத்தில் இணைய முடியும். மாவட்ட மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அலுவலகத்திற்குச் சென்று லக்பதி திதி திட்டத்திற்கான படிவத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

Lakhpati Didi Yojana eligibility

லக்பதி திதி திட்ட விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் நிரப்பி, தேவையான ஆவணங்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை சமர்பித்த பிறகு அதற்கான ரசீதும் வழங்கப்படும்.

Lakhpati Didi Yojana Rs. 5 lakh Loan

லக்பதி திட்டத்தின் அனைத்து பலன்களையும் பெறுவதற்கு ஆதார் அட்டை, வயதுச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், பான் கார்டு இருக்க வேண்டும். கரண்ட் அக்கவுண்ட் எனப்படும் நடப்பு வங்கிக் கணக்கும் வைத்திருக்க வேண்டும். மொபைல் எண் மற்றும் ஈமெயில் முகவரியும் கட்டாயம் தேவை.

click me!