இந்தியாவில் அதிக சம்பளம் தரும் மாநிலங்கள் எவை? தமிழ்நாட்டுக்கு எந்த இடம்?

First Published | Mar 14, 2024, 2:31 PM IST

பாலினம், இடம், கல்வி மற்றும் அனுபவம் போன்ற பல்வேறு காரணிகளை பொறுத்து சம்பளத்தின் விகிதாச்சாரம் மாறுபடுகிறது. அந்த வகையில், இந்தியாவில் அதிக சம்பளம் தரும் மாநிலங்கள் குறித்து தெரியவந்துள்ளது

படிப்பை முடித்தவுடன் அதிக சம்பளம் தரும் வேலையில் சேர வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கும். ஆனால், பாலினம், இடம், கல்வி மற்றும் அனுபவம் போன்ற பல்வேறு காரணிகளை பொறுத்து சம்பளத்தின் விகிதாச்சாரம் மாறுபடுகிறது. ஒவ்வொரு துறையிலும், துறையிலும் பெண்களை விட ஆண்கள் அதிகம் சம்பாதிக்கிறார்கள்.
 

அதன்படி, இந்தியாவில் சராசரி ஆண்டு சம்பளம் ரூ.9,65,350 ஆக இருக்கிறது. ஒவ்வொருவரின் தகுதிக்கு ஏற்ப ஊதியம் நிர்ணயிக்கப்படுகிறது. மேலும், அந்தந்த மாநிலங்களின் வாழ்வாதார செலவுகளுக்கு ஏற்பவும் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. எனவே, ஒவ்வொரு மாநிலத்துக்கு ஊதிய விகிதம் மாறுபடுகிறது.
 

Tap to resize

அதன்படி, இந்தியாவில் ஊழியர்களுக்கு அதிக சம்பளம் வழங்கும் மாநிலங்களின் பட்டியலில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் ஒருவரின் சராசரி மாதச் சம்பளம் ரூ.20,730ஆக இருக்கிறது. இந்தியாவில் அதிக சம்பளம் வழங்கும் மாநிலங்களின் பட்டியலில் மேற்குவங்கம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கு ஒருவரின் சராசரி மாத சம்பளம் ரூ.20,210ஆக இருக்கிறது.
 

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் மாகாராஷ்டிரா மாநிலத்தில் ஒருவர் பெறும் சராசரி மாத சம்பளம் ரூ.20,110 ஆகும். அதிக சம்பளம் வழங்கும் மாநிலங்களில் பீகார் மாநிலம் 4ஆவது இடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் ஒருவர் பெறும் சராசரி மாத சம்பளம் ரூ.19,960 ஆகும். ஒருவர் பெறும் சராசரி மாத ஊதியம் ரூ.19,740 என ராஜஸ்தான் மாநிலம் 5ஆவது இடத்திலும், மத்தியப்பிரதேச மாநிலம் 6ஆவது இடத்திலும் உள்ளது. மத்தியப்பிரதேச மாநிலத்தில் சராசரி மாத சம்பளம் ரூ.19,740 ஆகும்.
 

இந்தியாவில் ஊழியர்களுக்கு அதிக சம்பளம் வழங்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 7ஆவது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் ஒருவர் பெறும் சராசரி மாத ஊதியம் ரூ.19,600 ஆகும். பட்டப்படிப்பு படித்தவர்கள் அதிகம் படையெடுக்கும் பெங்களூரை தலைநகராக கொண்ட கர்நாடகா மாநிலம் இந்த பட்டியலில் 8ஆவது இடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில்  ஒருவர் பெறும் சராசரி மாத சம்பளம் ரூ.19,150 ஆகும்.
 

ஒருவர் பெறும் சராசரி மாத ஊதியம் ரூ.18,880 என குஜராத் மாநிலம் இந்த பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளது. ஒடிசா மாநிலம் 10ஆவது இடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் ஒருவர் பெறும் சராசரி மாதம் ஊதியம் ரூ.18,790 ஆகும். இந்த பட்டியலில் ரூ.18,290 ஊதியத்துடன் 13ஆவது இடத்திலும், பஞ்சாப் 14ஆவது இடத்திலும் (ரூ.18,120), டெல்லி 19ஆவது இடத்திலும் (ரூ.17,100), ஜம்முகாஷ்மீர் 20ஆவது இடத்திலும் (ரூ.17,010) உள்ளது.
 

Latest Videos

click me!