PMSBY eligibility and coverage
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா என்ற காப்பீடுத் திட்டத்தில் வெறும் 20 ரூபாய் செலுத்தினால் ஆண்டு ரூ.2 லட்சம் காப்பீடு கிடைக்கும்.
PMSBY insurance
பாலிசிதாரர் ஏதேனும் விபத்தில் உயிரிழக்க நேரிட்டால் அல்லது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாத அளவுக்கு உடற்குறைபாடுகள் ஏற்பட்டால், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ரூ.2 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.
PMSBY age limit
18 முதல் 70 வயது வரை உள்ள அனைவரும் இந்த பாலிசியை எடுக்கலாம். இந்த திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.20 கழித்து, காப்பீட்டுத் திட்டத்தில் வரவு வைக்கப்படும்.
PMSBY premium
குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு பாதுகாப்பை வழங்கும் நோக்கில் இத்திட்டத்தில் ரூ.2 லட்சம் வரை விபத்துக் காப்பீட்டு வழங்கப்படுகிறது. இந்த காப்பீட்டுத் திட்டம் 2015 இல் தொடங்கப்பட்டது.
Pradhan Mantri Suraksha Bima Yojana
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தில் வருடாந்திர பிரீமியம் தொகை ஜூன் 1, 2022 முதல் ரூ.20 ஆக அதிகரிக்கப்பட்டது. அதற்கு முன் இத்திட்டத்திற்கான பிரீமியம் தொகை ரூ.12 ஆக இருந்தது.
Pradhan Mantri Suraksha Bima Yojana insurance
ஏதேனும் ஒரு வங்கிக் கிளைக்குச் சென்று இந்த பாலிசியைப் பெற விண்ணப்பிக்கலாம். அரசு மற்றும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களும் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தை வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விவரம் அறிய https://nationalinsurance.nic.co.in/en/about-us/pradhan-mantri-suraksha-bima-yojana என்ற அதிகாரபூர்வ இணையதளத்தைப் பார்க்கலாம்.