களைகட்டும் ஆனந்த் அம்பானி திருமணம்.. இந்த சர்வதேச பிரபலங்கள் கலந்து கொள்கிறார்களாம்.. யா யார்?

First Published | Feb 23, 2024, 10:51 AM IST

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் திருமண நிகழ்வில் கலந்துகொள்ள சில முக்கிய விருந்தினர்கள் தொடர்பான தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 

இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் பிரபல தொழிலதிபருமான அம்பானி ரிலையன்ஸ் என்ற மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கி உள்ளார். தனது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீ மூலம் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டி வரும் அம்பானி உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி. இந்த தம்பதிக்கு ஆகாஷ் அம்பானி – இஷா அம்பானி என்ற இரட்டை குழந்தையும், ஆனந்த் அம்பானி என்ற இளைய மகனும் உள்ளனர்.

Tap to resize

இதில் கடந்த 2018-ம் ஆண்டு அம்பானி மகள் இஷாவுக்கும், 2019-ம் ஆண்டு ஆகாஷ் அம்பானிக்கும் திருமணம் நடந்தது. இந்த சூழலில் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்செண்ட் என்ற பெண்ணை காதலித்து வந்தார். இதை தொடர்ந்து இவர்களுக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. 

இந்த நிலையில் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்சண்ட் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ளன. கடந்த 16-ம் தேதி குஜராத்தின் ஜாம்நகரில் பாரம்பரிய 'லகான் லக்வானு' விழாவுடன் இந்த கொண்டாட்டங்கள் தொடங்கியது.

குஜராத்தி திருமணங்களில் நடக்கும் இந்த வழக்கமான நிகழ்வு, குறிப்பிடத்தக்க கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. அதாவது முதல் திருமண அழைப்பிதழை உருவாக்கி அதை கோயிலில் வைத்து பூஜை செய்யப்படுகிறது. அதன்பின்னரே அழைப்பிதழை மற்ற விருந்தினர்களுக்கு வழங்கப்படுகின்றன.

Anant Ambani Radhika Merchant Wedding Guest List

குஜராத்தின் ஜாம் நகரில் உள்ள அம்பானியின் வீட்டில் மார்ச் 1 முதல் மார்ச் 3 வரை இந்த கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. இந்த திருமண நிகழ்வில் கலந்துகொள்ள சில முக்கிய விருந்தினர்கள் தொடர்பான தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வில் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவரது முன்னாள் மனைவி மெலிண்டா கலந்து கொள்கின்றனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க 1,000 விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இந்திய பிரபலங்கள் மட்டுமின்றி, உலக அளவில் புகழ்பெற்ற பிரபலங்களும் இதில் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக உலக தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் விருந்தினர்கள் பட்டியல் தொடர்பான பட்டியலை அம்பானி குடும்பத்தினர் வெளியிடவில்லை.

Anant Ambani, Radhika Merchant,Wedding Guest

மேலும் மெட்டா சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க், மோர்கன் ஸ்டான்லி சிஇஓ டெட் பிக், டிஸ்னி சிஇஓ பாப் இகர், பிளாக்ராக் சிஇஓ லாரி ஃபிங்க், அட்னாக் சிஇஓ சுல்தான் அகமது அல் ஜாபர் மற்றும் எல் ரோத்ஸ்சைல்ட் தலைவர் லின் ஃபாரெஸ்டர் டி ரோத்ஸ்சைல்ட், அமெரிக்க முன்னாள் அதிபர் மகள் இவான்கா ட்ரம்ப்  உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Latest Videos

click me!