ரூ.4.5 கோடி சொகுசு கார்.. வருங்கால மருமகளுக்கு முகேஷ், நீட்டா அம்பானி வழங்கிய ஆடம்பர பரிசுகள் என்னென்ன?

First Published | Feb 22, 2024, 11:32 AM IST

முகேஷ் அம்பானி, நீட்டா அம்பானி தங்கள் வருங்கால மருமகளான ராதிகா மெர்ச்சண்ட்டிற்கு வழங்கி உள்ள ஆடம்பர பரிசுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பிரபல தொழிலதிபரும் பெரும்பணக்காரருமான முகேஷ் அம்பானியின் குடும்பம் ஆடம்பர வாழ்க்கை மற்றும் விலை மதிப்புமிக்க பரிசுகளை வழங்குவதற்காகவும் அடிக்கடி தலைப்பு செய்திகளில் வலம் வருகிறது. குறிப்பாக, தங்கள் மருமகள் ஷ்லோகா மேத்தாவுக்கு ரூ.451 கோடி மதிப்புள்ள நெக்லஸை நீதா அம்பானியும் முகேஷ் அம்பானியும் பரிசாக வழங்கினர். மேலும் தங்கள் பிள்ளைகளுக்கும் விலையுயர்ந்த பரிசுகளை வழங்கும் பாரம்பரியத்தை தொடர்ந்து வருகின்றனர். அந்த வகையில், முகேஷ் அம்பானி, நீட்டா அம்பானி தங்கள் வருங்கால மருமகளான ராதிகா மெர்ச்சண்ட்டிற்கும் இதே போல ஆடம்பர பரிசுகளை வழங்கி உள்ளனர்.

113.6 பில்லியன் டாலர் (தோராயமாக ரூ. 9,43,091 கோடி) சொத்து மதிப்புடன், உலக அளவில் 11-வது பணக்காரரான முகேஷ் அம்பானி தலைமையிலான அம்பானி குடும்பம், ஆடம்பரமான வாழ்க்கை முறைக்கு பெயர் பெற்றது. இந்த நிலையில் வரும் மார்ச் 1 முதல் 3ம் தேதி வரை ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் கிரீன்ஸில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்திற்கு முந்தை விழாக்களுக்கு அம்பானி குடும்பம் தயாராகி வரும் நிலையில் நீதா அம்பானி மற்றும் முகேஷ் அம்பானி இதுவரை தங்கள் வருங்கால மருமகளுக்கு ஆடம்பர பரிசுகள் குறித்து பார்க்கலாம்.

Tap to resize

1. நீதா அம்பானியின் வெள்ளி லட்சுமி-கணேஷ் பரிசு தொகுப்பு

அனந்த் அம்பானியின் வருங்கால மனைவியான ராதிகா மெர்ச்சன்ட், தனது மாமியார் நீட்டா அம்பானியிடம் இருந்து அழகான வெள்ளி லக்ஷ்மி-கணேஷ் பரிசு ஹேம்பரைப் பெற்றார். அந்த பரிசு தொகுப்பில் 2 வெள்ளி துளசி பானைகள் மற்றும் ஒரு வெள்ளி தூபக் குச்சி மற்றும் ஒரு லட்சுமி-கணேஷ் சிலை ஆகியவை அடங்கும். வெள்ளைப் பூக்கள் மற்றும் இதர அலங்காரப் பொருட்களால் ஹேம்பர் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

2. முகேஷ் அம்பானியின் 4.5 கோடி மதிப்புள்ள பென்ட்லி கான்டினென்டல் சொகுசு கார்

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோருக்கு முகேஷ் அம்பானி சுமார் ரூ. 4.5 கோடி மதிப்புள்ள ஆடம்பரமான பென்ட்லி கான்டினென்டல் ஜிடிசி ஸ்பீட் காரை பரிசாக வழங்கினார். விராட் கோலி, அமீர் கான், அபிஷேக் பச்சன் போன்ற சில புகழ்பெற்ற பிரமுகர்கள் மட்டுமே இந்த அதி விலையுயர்ந்த வைத்துள்ளனர். பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட இந்த சொகுசு கார் இரட்டை டர்போசார்ஜ் செய்யப்பட்ட 6.0 லிட்டர் W12 இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. வெறும் 3.6 வினாடிகளில் 0-60 மைல் வேகத்தை எட்டும்.

அம்பானிகள் நடத்திய பிரம்மாண்ட அரங்கேற்ற விழா

ராதிகா மெர்ச்சன்ட், நீட்டா அம்பானியைப் போலவே பரதநாட்டிய நடனக் கலைஞர் ஆவார்.. 2022 ஆம் ஆண்டில், மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் உள்ள தி கிராண்ட் தியேட்டரில் ராதிகா மெர்ச்சண்டிற்கு அம்பானி குடும்பத்தினர் அரங்கேற்றம் விழாவை ஏற்பாடு செய்தனர். குரு பாவனா தக்கரின் வழிகாட்டுதலின் கீழ் ராதிகா தனது பாரம்பரிய நடனப் பயிற்சியை முடித்தார். இந்த விழாவில் ரன்வீர் சிங், சல்மான் கான் மற்றும் அமீர் கான் போன்ற பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

முகேஷ் அம்பானியின் மருமகள் ராதிகா மெர்ச்சண்ட் அழகான முத்து மற்றும் வைர நெக்லஸை அணிந்திருந்தார். இந்த நெக்லஸ் அவரின் மாமியார் நீட்டா அம்பானிக்கு சொந்தமானது. சோனம் கபூரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நீதா அம்பானி அதே நெக்பீஸ் அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!