ரூ.25,000 போதும்! போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் முதலீடு செய்தால் 18 லட்சம் கிடைக்கும்!

First Published | Feb 26, 2024, 2:20 PM IST

பாதுகாப்பக முதலீடு செய்ய விரும்பும் பொதுமக்களுக்கு தபால் நிலைய சேமிப்புத் திட்டங்கள் வரப்பிரசாதமாக உள்ளன. பல திட்டங்கள் பாதுகாப்பானவையாகவும் அதிக லாபம் கொடுப்பவையாகவும் இருக்கும்.

Post Office Schemes

தேசிய சேமிப்பு தொடர் வைப்புக் கணக்கு திட்டம் அஞ்சல் துறையின் பிரபலமான சேமிப்புத் திட்டங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இத்திட்டதில் செய்யப்படும் முதலீடுகளுக்கு ஆண்டுக்கு 6.7 சதவீதம் வட்டி கிடைக்கும்.

National Savings Recurring Deposit Account

கூட்டு வட்டி முறையில் இந்த திட்டம் சிறந்த முதிர்வுத் தொகையை உறுதி செய்கிறது. இத்திட்டத்தில் தனிநபராகவோ 3 பேர் வரை கூட்டாகவோ முதலீடு செய்யலாம். குறைந்தபட்சம் 100 ரூபாயில் இருந்து எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.

Tap to resize

Post Office RD scheme

தேசிய சேமிப்பு தொடர் வைப்புக் கணக்கு திட்டத்தின் முதிர்வு காலம் ஐந்து ஆண்டுகள். பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலம் இந்தத் திட்டத்தில் கணக்கு தொடங்க முடியும்.

Post Office interest rate

இந்த திட்டத்தில் அட்வான்ஸ் டெபாசிட் என்ற ஆப்ஷன் உள்ளது. அதாவது 5 ஆண்டுகளுக்கான முதலீட்டை மொத்தமாக ஒரே முறையில் செலுத்த அட்வான்ஸ் டெபாசிட் ஆப்ஷனை பயன்படுத்தலாம். இந்தத் திட்டத்தில் முதலீட்டு செய்தவர்கள் ஓராண்டு கழித்து கடன் பெற்றுக்கொள்ளவும் வாய்ப்பு உள்ளது.

Post Office NSRDA scheme interest

இத்திட்டத்தில் மாதம் ரூ.25,000 செலுத்தினால், ஓர் ஆண்டில் ரூ.3 லட்சம் முதலீடு செய்திருப்பார். இது 5 ஆண்டுகளில் ரூ.15 லட்சமாக இருக்கும். இதற்கு ரூ.2,84,146 வட்டியாகக் கிடைக்கும். 5 ஆண்டுகளுக்குப் பின் கிடைக்கும் மொத்த முதிர்வுத் தொகை ரூ.17,84,146 ஆக இருக்கும்.

Latest Videos

click me!