சர்வதேச பொருளாதார நிலை, அமெரிக்க ரூபாய்க்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
26
அந்த வகையில் இந்தியாவில் கடந்த ஓராண்டாகவே தங்கள் விலை அதிகரிப்பதும் பின்னர் குறைவதும் என்ற நிலை நீடித்து வருகிறது. இதனிடையே இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரனமாக தங்கம் விலை உச்சத்தை எட்டியது.
36
Gold Prices Are Rising- Should you buy now or wait
எனினும் அவ்வப்போது தங்கம் விலை குறைந்து வந்தது. ஆனால் கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
46
gold
குறிப்பாக கடந்த 22 நாட்களாக தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் இனி தங்கத்தை வாங்க முடியுமா என்று நினைக்கும் அளவுக்கு கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
தமிழ் புத்தாண்டு தினமான நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 அதிகரித்து ரூ.54,540-க்கு விற்பனையானது.
56
இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.அதன்படி ஏப்ரல் 15-ம் தேதியான இன்று 22 கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து ஒரு கிராம் ரூ.6,790க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ. 54,340க்கு விற்பனையாகிறது.
66
எனினும் வெள்ளியின் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை 50 காசுகள் உயர்ந்து ரூ.89.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.89,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.