அவர் ஒரு Lucky Charm போல.. தளபதி விஜயை சந்தித்த பின் மெகா ஹிட் கொடுத்த மூன்று இயக்குனர்கள் - யாருப்பா அவங்க?

First Published Sep 11, 2023, 10:37 PM IST

ரசிகர்களின் நெஞ்சில் குடியிருக்கும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் அவர்கள் லியோ திரைப்படத்தை தொடர்ந்து தனது அடுத்த பட பணிகளை விரைவில் துவங்க உள்ளார். பல ஆண்டுகாலமாக நல்ல பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து அவர் இந்த உச்சத்தை தொட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Director Nelson Dilipkumar

இந்நிலையில் அவரை ஒரு திரைப்படத்தில் இயக்கி அடுத்த திரைப்படத்திற்கு நகரும் இயக்குனர்களுக்கு, அவர்களது அடுத்த திரைப்படம் மெகா ஹிட் திரைப்படமாக மாறி வருவது விஜயின் ரசிகர்களை பெரிதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. குறிப்பாக நெல்சன் திலீப் குமார் அவர்கள் தளபதி விஜய் அவர்களை வைத்து பீஸ்ட் என்ற திரைப்படத்தை வெளியிட்டார். அதன் பிறகு தான் அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து ஜெய்லர் திரைப்படத்தை எடுத்தார். அப்படம் சுமார் 600 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளது.

'புஷ்பா' 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! அல்லு அர்ஜூனால் கமல்ஹாசனுக்கு வந்த சிக்கல்?

Director Lokesh Kanagaraj

அதேபோல மாஸ்டர் திரைப்படத்தை அவரை வைத்து இயக்கி வெளியிட்ட லோகேஷ் கனகராஜ் அதன் பிறகு தனது கனவு நாயகனான உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களை வைத்து விக்ரம் என்ற திரைப்படத்தை இயக்கி வெளியிட்டார். அந்த திரைப்படமும் உலக அளவில் மாபெரும் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

Atlee

இயக்குனர் அட்லி, இவர் தளபதி விஜய் அவர்களை வைத்து மூன்று திரைப்படங்கள் இயக்கிய நிலையில் இறுதியாக 2019 ஆம் ஆண்டு பிகில் என்ற படத்தை தளபதி விஜய் அவர்களை வைத்து இயக்கி வெளியிட்டார்.இந்நிலையில் இப்போது அவருடைய இயக்கத்தில் வெளியாகி உள்ள ஜவான் திரைப்படம் வெளியான மூன்றே நாட்களில் 500 கோடி ரூபாய் என்ற மாபெரும் வசூலை தாண்டி பயணித்து வருகின்றது. இதனால் தளபதி விஜய் அவர்கள் ஒரு lucky charm என்று அனைவராலும் அழைக்கப்பட்டு வருகிறார்.

டார் டாரா கிழிந்து தொங்கும் பாவாடை! 'காவாலா' பாடல் தமன்னா ஸ்கர்ட்டுக்கே டஃப் கொடுக்கும் சாக்ஷி அகர்வால்!

click me!