Guru Peyarchi: குருவின் அருளால் அடுத்த ஒரு வருடம் இந்த ராசிகளுக்கு குபேர யோகம்....உங்கள் ராசி இதில் இருக்கா..?

First Published Jun 4, 2022, 4:01 PM IST

Guru Peyarchi Palangal 2022: குரு பகவானின் ராசி மாற்றம் ஏப்ரல் 2023 வரை சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் இருக்கும். அப்படியாக, யாருக்கு என்னென்னெ பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்ளலாம்.

Guru Peyarchi 2022:

குரு பெயர்ச்சி 2022:

ஜோதிட சாஸ்திரத்தின் படி, வியாழன் கிரகம் செல்வம், பெருமை, திருமண வாழ்க்கை, குழந்தைகள் மற்றும் கல்வி போன்றவற்றின் காரணியாக கருதப்படுகிறது. ஜாதகத்தில் வியாழன் வலுவாக இருந்தால், ஒரு நபர் அனைத்து பணிகளிலும் வெற்றி பெறுகிறார். அப்படியாக, குரு பகவானின் ராசி மாற்றம் பல ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான பலன்களை அளிக்கப்போகிறது. 

Guru Peyarchi 2022:

வியாழன் இவ்வாண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி மீன ராசியில் நுழைந்தார். இனி குரு பகவானின் அடுத்த ராசி மாற்றம் அடுத்த ஒருவருடம் கழித்து நிகழும். அதாவது, ஏப்ரல் 2023 இல் தான் நடக்கும். அத்தகைய சூழ்நிலையில், வியாழன் கிரகம் சுமார் ஒரு வருடம் ஒரே ராசியில் இருக்கும். வியாழனின் இந்த நிலையால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சிறப்பாக இருக்கும். அப்படியாக, அவை எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
 

Guru Peyarchi 2022:


ரிஷபம்:

வியாழன் ரிஷப ராசிக்காரர்களின் ஜாதகத்தில் 11 ஆவது வீட்டில் நுழைந்துள்ளார். இது ஜோதிடத்தில் வருமானம் மற்றும் லாபத்துக்கான ஸ்தானமாக கருதப்படுகின்றது. ஆகையால், இந்த நேரத்தில் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். தொழிலில் புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். தொட்டது துலங்கும். மொத்தத்தில் வெற்றி உறுதி. போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம். 
 

Guru Peyarchi 2022:

மிதுனம்:

வியாழன் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வியாழன் கிரகத்தின் அருளால் ஒரு வருடம் உங்களுக்கு வேற லெவல் அதிஷ்டம் தரும். வியாழன் உங்கள் ஜாதகத்தில் பத்தாம் வீட்டில் சஞ்சரித்துள்ளார். இது வேலை மற்றும் பணிகளுக்கான ஸ்தானமாகும். எனவே, இந்த நேரத்தில் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். திருமணம் கை கூடும். ஆரோக்கியம் மேம்படும். மிதுன ராசியின் அதிபதி புதன். புதன் மற்றும் வியாழன் இடையே நட்பு உணர்வு உள்ளது. எனவே, இந்த நேரம் உங்களுக்கு மிகவும் சாதகமாக உள்ளது.

shukra budh 001

சிம்மம்:

இந்த நேரத்தில், உங்களுக்கு சிறப்பாக இருக்கும். உங்களுக்கு வாழ்வில் புதிய நம்பிக்கை பிறகும். இந்த நேரத்தில், தேவையில்லாத செலவுகளைக் கட்டுப்படுத்துவது முக்கியம். தொழில் முன்னேற்றத்திற்கு கடின உழைப்பு தேவைப்படுகிறது. வீட்டு மூத்த உறுப்பினர்களின் ஆலோசனையை பின்பற்றவும். சில சமயங்களில் அதீத தன்னம்பிக்கை உங்கள் வேலையை சீர்குலைக்கும். நல்ல குடும்பம் மற்றும் வணிக உறவுகளில் பராமரிப்பு அவசியம். போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம். 

Guru Peyarchi 2022:


கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு வியாழன் கிரகம் வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தரும். வியாழன் கிரகம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டிற்கு அதிபதி. இது எதிரியின் ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. எனவே, இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் எதிரிகளை வெற்றி பெறுவீர்கள். போட்டித் தேர்வுக்குத் தயாராகும் நபர்களுக்கு இது நல்ல நேரமாக இருக்கும்.  உங்கள் ராசியிலிருந்து வியாழன் ஒன்பதாம் வீட்டில் சஞ்சரித்துள்ளார். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். தொழிலில் முன்னேற்றம் பிறக்கும்.  

மேலும் படிக்க....Sukran Peyarchi 2022: கடக ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி...வாழ்வில் புது ஒளி பிறக்கும், தொழிலில் வெற்றி உறுதி...

click me!