Budhaditya yogam 2022: புதனுடன் கூட்டணி சேரும் சூரியன்...ஜூன் 3 வரை 'புத-ஆதித்ய' யோகம் பெறும் ராசிகள்...

First Published May 17, 2022, 8:00 AM IST

Budhaditya yogam 2022: புத்தி மற்றும் பேச்சின் கடவுளாக புதன் கிரகம், வெற்றி, ஆரோக்கியம் ஆகியவற்றின் காரணமான சூரியனுடன், கூட்டணி அமைத்துள்ளார்.

budhaditya

புத ஆதித்ய யோகம் 2022:

சூரியன் மற்றும் புதன் கிரகங்கள் இணையும் போது, புத ஆதித்ய யோகம் உருவாகிறது. மே 15 முதல் ரிஷப ராசியில்  இந்த புத ஆதித்ய யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகம் ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த மாற்றத்தால்  கிரகங்களின் ராஜாவான 'சூரியன்' மற்றும் தளபதியான  'புதன்' ஆகிய இருவரும் ரிஷப ராசியில் பிரவேசித்துள்ளனர். 

Astrology

இந்த மாற்றத்தால், ஜூன் 3ம் தேதி வரை அனைத்து ராசிகளுக்கும் அசுப பலன்கள் கிடைக்கும். ஆனால், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மட்டும் சுப பலன்கள் உண்டாகும். அப்படி எந்தெந்த ராசிகள் சுப பலன்களை அனுபவிக்க இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.

Taurus


ரிஷபம்:

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு உருவாகும் புத ஆதித்ய யோகம் சுப பலன்களைத் தரும். திடீர் பண வரவு உண்டாகும். தொழிலில் பல வெற்றிகளை கொடுக்கும். நீங்கள் மிக பெரிய சாதனைகளை செய்வீர்கள். எளிதாக செய்து முடிப்பீர்கள்.நினைத்ததை நடத்தி காட்டுவீர்கள். வாழ்வில் நிம்மதி இருக்கும். 
 

lion

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு உருவாகும் புத ஆதித்ய யோகம் நன்மையை தரும். மகிழ்ச்சி பொங்கும். உங்களுக்கு பணம் கிடைக்கும். உயர் பதவிகளை பெறுவீர்கள். மரியாதை கூடும். தொழிலதிபர்களுக்கும் இந்தநேரம் மிகவும் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய வேலை கிடைக்கும். பணியிடத்தில் பாராட்டுக்களை பெறுவீர்கள். 

VIRGO

கன்னி: 

கன்னியில் பிறந்தவர்களுக்கு, புத ஆதித்ய யோகம் எதிர்காலத்துக்கான பெரிய திட்டங்கள் உண்டாகும். திடீர் பண வரவு உண்டாகும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். வெளியூர் பயணத்திற்கு திட்டமிடுவீர்கள். இந்த நாள் வசீகரமாக இருப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும்.

Astrology

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு  உருவாகும் புத ஆதித்ய யோகம் மிகவும் சாதகமாக இருக்கும். உங்களின் வருமானம் தேவையான அளவு அதிகரிக்கும். புதிய வழிகளில் பணம் உண்டாகும். வணிகர்கள் புதிய முன்னேற்றம் காணப்படும். பெரிய அலவிலான ஒப்பந்தம் கை கூடும்.  

மேலும் படிக்க...இன்று பவுர்ணமியுடன் கூடிய சந்திர கிரகணம்...இந்த ராசிகளுக்கு மட்டும் ராஜயோகம் ..இன்றைய 12 ராசிகளின் பலன்கள்...

click me!