இது தான் பர்ஃபெக்ட் வாரிசு டீம்! விஜய் மகன் சஞ்சய் படத்தின் நடிகர், நடிகை, இசையமைப்பாளர் குறித்த தகவல் இதோ!

First Published Mar 7, 2024, 4:58 PM IST

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும், படத்தில் நடிக்க உள்ள ஹீரோ, ஹீரோயின், இசையமைப்பாளர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

Director Jason Sanjay

பிரபலங்களின்  வாரிசுகள் பலர், மற்ற துறையில் ஆர்வம் காட்டுவதை விட, தங்களின் அப்பா, அம்மாவை தொடர்ந்து திரையுலகில் ஆர்வம் காட்ட துவங்குகிறார்கள். அந்த வகையில் தந்தை விஜய்யை தொடர்ந்து, திரையுலகில் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார், விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய்.
 

சஞ்சய்யை ஹீரோவாக நடிக்க வைக்க பல முன்னணி இயக்குனர்கள் ஆர்வம் காட்டிய போதும், தாத்தாவை போல் படம் இயக்கவே ஆர்வம் இருப்பதாக கூறி தன்னை தேடி வந்த வாய்ப்புகளை நிராகரித்து விட்டார். திரைப்படங்கள் இயக்குவதற்காகவே, சினிமா மேக்கிங் குறித்த படிப்பை லண்டனில் படித்து முடித்துவிட்டு இந்தியா வந்த கையோடு... தன்னுடைய முதல் படத்தின் கதையை எழுத துவங்கினார்.

Ajith Hospitalized: அஜித்துக்கு மூளையில் ஸ்டன்ட் வைக்கப்பட்டுள்ளதா? தீயாய் பரவும் தகவல்..! பதறிய ரசிகர்கள்.!
 

Jason sanjay

கதை தயாரானதும், லைகா நிறுவனத்திடம் தன்னுடைய கதையை கூறி... பட வாய்ப்பை பெற்றார். இந்த படம் குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியான போதிலும், இதுவரை படப்பிடிப்பு துவங்கப்படாமல் உள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங்கிற்கு முன்னதான பணிகள் தீவிரமாக ஒருபுறம் நடந்து வரும் நிலையில், இந்த மாதத்தின் கடைசியிலோ அல்லது அடுத்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என கூறப்படுகிறது.
 

Jason sanjay

விஜய்யின் மகன் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ள நடிகர் யார் என்பது பற்றி ஒரு விவாதமே சென்ற நிலையில், தற்போது இந்த படத்தில் ,நடிக்க உள்ள நடிகர், நடிகை மற்றும் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நிறைய குழந்தை பெத்துக்கணும்! அதனால் தான் இதை செஞ்சுக்கிட்டு இருக்கேன்.. உடைந்து அழுத விஜய் டிவி பிரியங்கா!
 

அதன்படி இந்த படத்தில், நடிகர் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும், இவருக்கு ஜோடியாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள், அதிதி ஹீரோயினாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே போல் இந்த படத்திற்கு, ஏ.ஆர்.ரகுமானின் மகன் அமீன் தான் இசையமைக்க உள்ளார். இந்த தகவலை அறிந்து ரசிகர்கள் பலர், இது தான் பர்ஃபெட்டான வாரிசு டீம் என தங்களின் கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.

click me!