3ஆம் கட்ட தேர்தலில் 65.68% வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பு

By SG Balan  |  First Published May 12, 2024, 8:47 AM IST

மே 7ஆம் தேதி நடந்த மூன்றாம் கட்ட தேர்தலில் 65.68% வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


மக்களவைத் தேர்தலில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவுக்கான இறுதிசெய்யப்பட்ட வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மே 7ஆம் தேதி நடந்த தேர்தலில் 65.68% வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தெரிவித்துள்ளது.

மூன்றாம் கட்ட வாக்குப்பதிவுக்கு அடுத்த நாளான மே 8ஆம் தேதி உத்தேசமான வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இப்போது இறுதியான வாக்குப்பதிவு சதவீதம் வெளியிடப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

மே 11ஆம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், 66.89% ஆண்கள், 64.4% பெண்கள் மற்றும் 25.2% திருநங்கைகள் மூன்றாம் கட்டத் தேர்தலில் வாக்கு செலுத்தியுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. மூன்றாவது கட்டத் தேர்தலில் 8.85 கோடி ஆண்கள், 8.39 கோடி பெண்கள் உட்பட 17.24 கோடி பேர் வாக்களித்தத் தகுதி பெற்றிருந்தனர்.

மூன்றாம் கட்டத் தேர்தலில் 12 மாநிலங்களில் 93 தொகுதிகளில் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது மூன்றாம் கட்டத்தில் 68.4% வாக்குகள் பதிவாகியிருந்தன.

முதல் கட்ட தேர்தலின் இறுதி வாக்குப்பதிவு சதவீதம் 10 நாட்களுக்குப் பிறகு வெளியிடப்பட்டது. இதேபோல் இரண்டாம் கட்டத் தேர்தலின் வாக்கு சதவீதம் 4 நாட்களுக்குப் பிறகுதான் அறிவிக்கப்பட்டது.

மக்களவைத் தேர்தலில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு நாளை (மே 13) நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 10 மாநிலங்களில் இருந்து 96 தொகுதிகளில் தேர்தல் நடக்கவுள்ளது.

click me!