Suriyan Peyarchi: ஜூன் 15-ல் சூரியன் பெயர்ச்சி..இந்த ராசிகளுக்கு பன்மடங்கு வளர்ச்சி உறுதி, வாழ்க்கை ஜொலிக்கும்

First Published Jun 6, 2022, 4:00 PM IST

Suriyan Peyarchi 2022 Palangal: ஜூன் 15ஆம் தேதி கிரகங்களின் அரசனான சூரியன் பெயர்ச்சியாகப் போகிறது. சூரியனின் இந்த பெயர்ச்சி 12 ரசிகளிலும் இருக்கும். இது, சிலருக்கு சுப பலன்களை கொடுக்கும். சிலருக்கு அசுப பலன்களை கொடுக்கும்.

suriyan peyarchi 2022

சூரியனின் பெயர்ச்சி 2022:

ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒருவரது ஜாதகத்தில் சூரியன் வலுவாக இருந்தால், அவருக்கு மரியாதை மற்றும் புகழ் கிடைக்கும். அதே நேரத்தில், சூரியன் பலவீனமாக இருக்கும்போது, ​​நபரின் ஆரோக்கியம், கௌரவம் மற்றும் புகழ் ஆகியவற்றில் எதிர்மறையான விளைவு ஏற்படும். எனவே, நிகழ்ந்துள்ள சூரியன் பெயர்ச்சி எந்தெந்த ராசிகளுக்கு என்னென்னெ பலன்கள் கொடுக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.

suriyan peyarchi 2022

மிதுனம்: 

மிதுனம் ராசியில் பிறந்தவர்களுக்கு நிகழ்ந்துள்ள சூரியன் பெயர்ச்சி, சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன், மனைவி, குழந்தைகளால் வீட்டில் குதூகலம் பிறக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். பண வரவு உங்களுக்கு சாதகமாக இருக்கும். தாயின் சிறப்பு அன்பும் ஆதரவும் கிடைக்கும்.

suriyan peyarchi 2022

மகரம்: 

மகரம் ராசிக்காரர்களுக்கு சூரியன் பெயர்ச்சி நல்ல நாளாக இருக்கும். வியாபாரம் பெருகும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படலாம். இடமாற்றத்திற்கான வாய்ப்புகளும் உள்ளன. இந்த மாற்றங்கள் உங்களுக்கு அனுகூலமான பலன்களை அள்ளித்தரும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத இடங்களில் இருந்து நல்ல செய்திகளையும், பரிசுகளையும் பெறுவீர்கள். சுப நிகழ்ச்சிகள்  நடக்கும். 

suriyan peyarchi 2022

கன்னி:  

கன்னி ராசிக்காரர்களுக்கு ஜூன் 15-ம் தேதி சூரியனின் பெயர்ச்சி  நன்மைகளை தரும். குறிப்பாக தொழிலதிபர்கள் சிறப்பான வெற்றியைப் பெறுவார்கள். வருமானம் அதிகரிக்கும். வீட்டில் ஆன்மீக காரியங்கள், சுப காரியங்கள் நடக்கும். இந்த நேரத்தில் அதிக லாபம் பெறலாம். பண வரவு அதிகரிக்கும். வெளியூர் பயணம் செல்லலாம். 

மேலும் படிக்க..Sani Peyarchi: இன்று சனியின் வக்ர பெயர்ச்சி...ஏழரை சனியில் இருந்து தப்பித்து, அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்

click me!