Bomb Blast In Manipur : மணிப்பூரில் மீண்டும் பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளது, குண்டு வெடித்ததில் இரு CRPF வீரர்கள் இறந்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூரில் வெடித்துள்ள கலவரம் குறித்து தினமும் வெளியாகும் தகவல்கள் மனதை உலுக்கும் வண்ணம் இருக்கின்றது. மணிப்பூரில் சமவெளி பகுதியில் வசித்து வருபவர்களில் பெரும்பான்மையாக இருந்து வருகின்றனர் மைதேயி என்கின்ற சமூகத்தினர். அதேபோல அப்பகுதியில் குகி-சோ என்ற பழங்குடி இனத்து மக்களும் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு இடையே சிறியதாக துவங்கிய சண்டை, கடந்த ஆண்டு மே மாதம் மிகப்பெரிய இனக்கலவரமாக வெடித்தது. இதுவரை 210 க்கும் மேற்பட்டோர் இந்த கலவரத்தில் கொல்லப்பட்டுள்ளனர். பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு பொதுவெளியில் அழைத்துச் செல்லப்பட்டு கற்பழிக்கப்பட்ட கொடூரங்களும் மணிப்பூரில் அரங்கேறியது நாம் அறிந்ததே.
டி.கே. சிவக்குமாரின் மகள் அரசியலில் நுழைகிறாரா? யார் இந்த ஐஸ்வர்யா ஹெக்டே?
இந்த இன கலவரத்தால் மணிப்பூரில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த நிலத்தை விட்டு வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். இன்னும் அம்மாநிலத்தில் முழுமையாக அமைதி திரும்பவில்லை, இந்நிலையில் மக்களவைத் தேர்தல் அங்கு இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. 69.18 சதவீத வாக்குப்பதிவு அங்கு பதிவான குறிப்பிடத்தக்கது.
ஆனால் அங்கு இரண்டு மாவட்டங்களில் 11 வாக்குச் சாவடிகளில் அசம்பாவிதங்கள் ஏற்பட்ட நிலையில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி மறுவாக்கு பதிவு நடந்தது. இதனிடையே இன்று வெள்ளிக்கிழமை அதிகாலையில் மணிப்பூரின் பிஷ்ணுபூர் என்ற மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் 128வது பட்டாலியன் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் இரு வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் நான்கு பேர் படுகாயம் அடைந்த நிலையில் இந்த தாக்குதலை குகி இனத்தைச் சேர்ந்த ஆயுதம் ஏந்திய குழுவினர் தான் நடத்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் அதிக அளவிலான பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஜம்முவின் ரம்பனில் மூழ்கிய நிலம்.. வீடுகளில் ஏற்பட்ட விரிசல்.. சாலை இணைப்பு துண்டிப்பு..!