டி.கே. சிவக்குமாரின் மகள் அரசியலில் நுழைகிறாரா? யார் இந்த ஐஸ்வர்யா ஹெக்டே?

By Ramya s  |  First Published Apr 27, 2024, 9:40 AM IST

டி.கே சிவகுமாரின் மகள் அரசியலில் நுழையலாம் என்று தகவல்கள் வெளியான நிலையில், இதுகுறித்து ஐஸ்வர்யா விளக்கமளித்துள்ளார்.


கர்நாடக காங்கிரஸ் தலைவராக இருப்பவர் டி.கே சிவகுமார். கடந்த ஆண்டு அங்கு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை பிடித்ததில் பெரும் பங்கு சிவகுமாருக்கு உண்டு. கர்நாடக முதல்வர் பதவிக்கு டி.கே. சிவகுமார் சித்தராமையா இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் சித்தராமையாவுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது. தற்போது கர்நாடகத்தின் துணை முதலமைச்சராக டி.கே சிவகுமார் இருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராகவும் டி.கே சிவகுமார் அறியப்படுகிறார். கட்சிக்குள் பிரச்சனைகள் வரும் போதெல்லாம் அவர் தான் அனைவரையும் ஒருங்கிணைத்து, சமரசம் செய்து பிரச்சனைகளை சுமூகமாக தீர்த்து வைக்கிறார். 

Latest Videos

undefined

ஜம்முவின் ரம்பனில் மூழ்கிய நிலம்.. வீடுகளில் ஏற்பட்ட விரிசல்.. சாலை இணைப்பு துண்டிப்பு..!

இந்த நிலையில் கர்நாடகாவில் உள்ள 28 மக்களவை தொகுதிகளில் நேற்று முதல்கட்டமாக 14 தொகுதிகளுக்கு நேற்ரு தேர்தல் நடந்தது. இதில் பெங்களூரு புறநகர் தொகுதியில் சிட்டிங் எம்.பியாக இருக்கும் டி.கே சிவகுமாரின் தம்பி, டி.கே சுரேஷ் மீண்டும் களமிறங்கி உள்ளார்.

பெங்களூரு புறநகர், பெங்களூரு வடக்கு உள்ளிட்ட 14 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடந்தது. இந்த நிலையில் நேற்று டி.கே சிவகுமாரின் மகள் ஐஸ்வர்யா பெங்களூருவில் வாக்களித்தார். வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “எனக்கு அரசியலில் சேரும் எண்ணம் இல்லை. நான் ஒரு கல்வியாளர், அதைச் செய்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்தியாவை பெருமைப்படுத்த ஒவ்வொருவரும் வெவ்வேறு துறைகளில் பணியாற்ற வேண்டும், நான் இப்போது தேவைப்படும் துறையில் பணியாற்றி வருகிறேன்.” என்று தெரிவித்தார்

“இது இன்று நாட்டைப் பற்றியது. நாடு வளர்ந்தால் நானோ அல்லது வேறு எந்த மனிதனோ வளர முடியும். இந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுமா என்று எனக்குத் தெரியாது, ஆனால் ஜூன் 4 ஆம் தேதி என் சித்தாவுடன் வெற்றியை கொண்டாடுவேன் என்று நான் மிகவும் நம்புகிறேன்.” என்று கூறினார்.முன்னதாக டி.கே சிவகுமாரின் மகள் அரசியலில் நுழையலாம் என்று தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் தான் அரசியலில் நுழையப் போவதில்லை என்று ஐஸ்வர்யா விளக்கமளித்துள்ளார். 

லோக்சபா தேர்தல் 2024: 60.96% வாக்குகள் பதிவு.. மாநில வாரியான விவரங்கள்.. முழு விபரம் இதோ !!

டி.கே சிவக்குமாருக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் தான் ஐஸ்வர்யா, இவர் அமர்த்தியா ஹெக்டே என்பவரை கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மறைந்த கஃபே காபி டே நிறுவனர் விஜி சித்தார்த்தாவின் மகன் தான் அமர்த்தியா ஹெக்டே. மேலும் அமர்த்தியாவின் தாத்தா (தாய் வழி தாத்தா)_ எஸ்எம் கிருஷ்ணா ஆவார். இவர் கர்நாடகாவின் முன்னாள் முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!