Suriya Peyarchi 2022: மே 15 ஆம் தேதி மேஷ ராசியில் சூரிய பெயர்ச்சி...இந்த ராசிக்காரர்கள் ரொம்ப கவனமா இருக்கணும்

First Published May 13, 2022, 12:05 PM IST

Suriya Peyarchi 2022 Palangal: ஜோதிட சாஸ்திரப்படி, இதுவரை மீன ராசியில் பயணித்து வரும், சூரியன் 2022 மே 15 ஆம் தேதி சூரியன் மேஷ ராசிக்கு செல்கிறார். இந்த சூரிய பெயர்ச்சி எந்தெந்தெந்த ராசிகளுக்கு பலன்களை அள்ளி தரும், என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Astrology

ஜோதிட சாஸ்திரப்படி இதுவரை மீன ராசியில் பயணித்து வரும், சூரியன் 2022 மே 15 ஆம் தேதி சூரியன் மேஷ ராசிக்கு செல்கிறார். இந்த சூரிய பெயர்ச்சி சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் ஜோதிட சாஸ்திரத்தில் சூரியன் கிரகங்களின் ராஜாவாகவும், செவ்வாய் கிரகங்களின் தளபதியாகவும் கருதப்படுகிறது. 

Astrology 2022-

சூரிய பெயர்ச்சி 2022:

இந்த சூரிய பெயர்ச்சி சிலருக்கு சிறப்பான பலன்களை தரும். இருப்பினும், இந்த சூரிய பெயர்ச்சி காலத்தில் சிம்ம ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். எனவே, இந்த சூரிய பெயர்ச்சி எந்தெந்தெந்த ராசிகளுக்கு பலன்களை அள்ளி தரும், என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Aries

மேஷம்:

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு சூரியனுடன் ராகுவும் அமர்ந்திருப்பதால் உங்களுக்கு நல்ல காலம் பிறகும்.  இந்த ராசிக்காரர்களுக்கு தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான பலன்கள் கிடைக்கும். சமூகத்தில் உரிய மரியாதை கிடைக்கும். இந்த ராசிக்காரர்களின் அறிவுத்திறன் மிகவும் கூர்மையாக இருக்கும், உங்களுக்கு மேல் இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். 

Taurus

ரிஷபம்:

உங்கள் ராசிக்கு சூரியன் இடமாற்றம் சிறப்பான பலன்கள் உண்டு. உங்களுக்கு வேலையில் முன்னேற்றம் ஏற்படும். அரசுப் பணிகளில் நல்ல பலன்கள் கிடைக்கும். வாழ்வில் செல்வம் செழிக்கும். போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம். தொழிலில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். பெரிய கனவு நிறைவேறும். வருமானத்தில் வலுவாக அதிகரிக்கும். 

Libra

துலாம்:

துலாம் ராசிக்கு சூரியன் இடமாற்றம் நன்மையாக இருக்கும். நீங்கள் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். திருமணத்திற்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு திருமணம் கைகூடும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் நிர்ணயித்த இலக்குகள் நிறைவேறும். எதிரிகள் மீது வெற்றி பெறுவீர்கள். 

 மேலும் படிக்க.... குருவின் பார்வையால் கஜகேசரி யோகம் பெறும் ராசிகள்...செல்வம் செழிக்கும், கோடி நன்மை இருக்கும்!12 ராசிகளின் பலன்!

click me!