விக்ரம் படத்திற்கு முன்பே கமல் படத்தில் நடித்துள்ள சூர்யா...என்ன படம் கண்டுபிடித்தீர்களா..? வைரலாகும் அப்டேட்

First Published May 12, 2022, 5:04 PM IST

Vikram Movie: விக்ரம் படத்தில் கமல் எழுதி, பாடிய 'பத்தல பத்தல' பாடல் ஒன்று நேற்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த பாடல் இதுவரை 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது

Kamal

வளர்ந்து வரும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல் நடிப்பில் அனிருத் இசையில்உருவாகி  உள்ள படம் விக்ரம். இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக கன்னடத்தில் இளம் நடிகையாக வலம் வரும் ஷான்வி ஸ்ரீவஸ்தவா நடித்துள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். 

kamal

இந்த படத்தில் கமலுடன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் நரேன், காளிதாஸ் ஜெயராம் பிக்பாஸ் சிவானி, தொகுப்பாளினி மகேஸ்வரி மற்றும் மைனா நந்தினி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. 

kamal

இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இப்படம் படபிபிடிப்பு முடிந்து ப்ரோமோஷன் வேலைகள் படு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த விக்ரம் படம் வரும் ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
 

kamal

இதன் ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவி கைப்பற்றியுள்ளது. இதன் ப்ரோமோஷன் வேலைகள் படு வேகமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்திலிருந்து முதல் சிங்குளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக கமல் எழுதி, பாடிய பத்தல பத்தல' பாடல் ஒன்று நேற்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.இந்த பாடல் இதுவரை 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. 
 

vikram

தற்போது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தில் நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 2010ம் ஆண்டு கமல், மாதவன் மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான மன்மதன் அம்பு படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த நிலையில், மீண்டும் கமல் படத்தில் நடிக்கிறார்.

vikram

அதேபோன்று, விக்ரம் படத்தில் அமிதாப் பச்சன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்று கூறப்பட்டது. 37 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் கமலுடன் அமிதாப் பச்சன் இணைந்து நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடக்கத்தக்கது.
 

vikram

மேலும், இந்த படத்தில் கமலை முப்பது வயது நபராக மாற்றும் தொழில்நுட்பத்திற்கு படக்குழு பத்து கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

vikram

விக்ரம் படத்தின் டிரைலர் மற்றும் இசைவெளியீட்டு விழா வருகிற மே 15-ந் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. ரிலீசுக்கு இன்னும் 18 நாட்களே எஞ்சி உள்ளதால், கமல் ரசிகர்கள் ரிலீஸ் தேதியை எதிர்நோக்கி காது கொண்டிருக்கின்றனர்.

click me!