கேப்டன் விஜயகாந்தின் சூப்பர் ஹிட் தமிழ் படம்.. பாலிவுடில் ரீமேக் செய்து வெற்றி கண்ட ரஜினிகாந்த் - எந்த படம்?

First Published Dec 28, 2023, 11:22 AM IST

Vijayakanth and Rajinikanth : ரஜினிகாந்த மற்றும் விஜயகாந்த் ஆகிய இருவரும் நல்ல நண்பர்கள் என்பது பலர் அறிந்த உண்மை. அவர் உடல்நல குன்றி இருந்த காலத்தில் அவரை நேரில் சந்தித்து கட்டியணைத்து ஆறுதல் சொன்னவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

sattam oru iruttarai

பொதுவாக பெரிய நடிகர்களின் படங்கள் பிற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நடிகர் விஜயகாந்த் அவருடைய திரைப்படங்களும் பிற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது. தமிழில் வெளியான அவருடைய திரைப்படம் ஒன்று ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் சூப்பர் ஹிட் நடிகர்களால் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. 

விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த குவியும் தொண்டர்கள்... இறுதிச்சடங்கு எப்போது? முழு விவரம் இதோ

Chiranjeevi

Chattaniki Kallu Levu என்ற பெயரில் கடந்த 1981 ஆம் ஆண்டு எஸ்ஏ சந்திரசேகர் இயக்கி வெளியான தெலுங்கு திரைப்படத்தில் பிரபல நடிகர் சிரஞ்சீவி மற்றும் நடிகை மாதவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் அதே 1981 ஆம் ஆண்டு தமிழில் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான சட்டம் ஒரு இருட்டறை திரைப்படத்தின் ரீமேக் என்பது பலர் அறிந்திடாத உண்மை.

Andhaa Kaanoon

அதேபோல கேப்டன் நடிப்பில் தமிழ் மொழியில் கடந்த அதேபோல கேப்டன் நடிப்பில் வெளியான "சட்டம் ஒரு இருட்டறை" திரைப்படம் ஹிந்தி மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. Andhan Kanoon என்ற பெயரில் வெளியாகி பாலிவுட் உலகில் மிகப்பெரிய ஹிட்டான அந்த திரைப்படத்தில் விஜயகாந்த் கதாபாத்திரத்தில் நடித்திருந்தது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் அமிதாப் பச்சன் அவர்களும் ஒரு சிறு கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ரஜினிக்கே டஃப் கொடுத்த கேப்டன்.. சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்பட்ட விஜயகாந்த்... எப்போது தெரியுமா?

click me!