Aranmanai 4 : விஷாலுடன் ஒத்தைக்கு ஒத்தையாக மோத ரெடியான சுந்தர் சி... அரண்மனை 4 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

First Published Apr 14, 2024, 11:06 AM IST

சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா, ராஷி கண்ணா, யோகிபாபு நடிப்பில் உருவாகி இருக்கும் அரண்மனை 4 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

Sundar C movie Aranmanai 4

காமெடி படங்கள் எடுப்பதில் கில்லாடி இயக்குனர் என்றால் அது சுந்தர் சி தான். அவர் இயக்கிய வின்னர், கலகலப்பு, கிரி, உள்ளத்தை அள்ளித்தா போன்ற படங்களே அதற்கு சான்று. காமெடி டிராக்கில் கலக்கி வந்த சுந்தர் சி-யை ஹாரர் டிராக்கிற்கு மாற்றிய திரைப்படம் தான் அரண்மனை. இப்படத்தின் முதல் பாகத்தை கடந்த 2014-ம் ஆண்டு இயக்கி வெளியிட்டார் சுந்தர் சி. ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி நடிப்பில் வெளிவந்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

Aranmanai 4

அரண்மனை முதல் பாகம் வெற்றியடைந்ததை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை கடந்த 2016-ம் ஆண்டு வெளியிட்டனர். திரிஷா, பூனம் பாஜ்வா, ஹன்சிகா, சித்தார்த் நடிப்பில் வெளிவந்த இப்படம் அதிரிபுதிரியான வெற்றியை ருசித்ததோடு வசூலையும் வாரிக்குவித்தது. பின்னர் 5 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் அரண்மனை படத்தின் 3-ம் பாகத்தை இயக்கி வெளியிட்டார் சுந்தர் சி. இப்படம் விமர்சன ரீதியாக சொதப்பினாலும் வசூலை வாரிக்குவித்தது.

இதையும் படியுங்கள்... Aranthangi Nisha : தமிழ் புத்தாண்டன்று புது பிசினஸ் தொடங்கிய அறந்தாங்கி நிஷா - குவியும் வாழ்த்துக்கள்

aranmanai 4 Release Date

இந்த நிலையில், தற்போது அப்படத்தின் நான்காம் பாகத்தை பிரம்மாண்டமாக எடுத்து முடித்துள்ளார் சுந்தர் சி. இப்படத்தில் சுந்தர் சி-யே ஹீரோவாகவும் நடித்துள்ளார். இதில் ராஷி கண்ணா, தமன்னா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். மேலும் யோகிபாபு, விடிவி கணேஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஏப்ரல் 26-ந் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளனர்.

Rathnam movie Release Date

இதன்மூலம் விஷால் உடன் நேரடி மோதலை உறுதி செய்துள்ளார் சுந்தர் சி. ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ரத்னம் திரைப்படம் வருகிற ஏப்ரல் 26-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. அப்படத்துக்கு போட்டியாக தான் தற்போது அரண்மனை 4 திரைப்படம் களத்தில் குதித்து உள்ளது. இரண்டு படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளதால், பாக்ஸ் ஆபிஸில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்... எதிர்நீச்சல் சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடிக்கும் மதுமிதாவா இது? கவர்ச்சியில் புகுந்து விளையாடுறாங்களே!

click me!