கோடையில் வீட்டை ஜில்லுனு ஆக்க வந்துவிட்டது.. சுவரில் மாட்டப்படும் ஏர் கூலர்..விலை ரொம்ப கம்மிதான்..

First Published May 2, 2024, 7:32 PM IST

AC போல் சுவரில் எளிதாக மாட்டிக் கொள்ளும் ஏர் கூலர் பற்றி இன்று உங்களுக்கு சொல்லப் போகிற மேலும் அதன் விலையும் மிகக் குறைவு. அதுமட்டுமின்றி இது மின் உபயோகத்தையும் குறைக்கிறது.

கோடை காலம் தொடங்கியுள்ளதால்,  ஏசி மற்றும் ஏர் கூலரின் விற்பனை அதிகரித்துள்ளது. வெப்பத்திலிருந்து நிவாரணம் வழங்க இது சிறந்த வழி. ஆனால், அதிக மின்சார நுகர்வு மற்றும் அதன் செலவு காரணமாக, எல்லாராலும் ஏசி வாங்க முடியாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பலர் ஏசிக்குப் பதிலாக கூலர்களைப் பயன்படுத்துகின்றனர். 

தற்போது, கடைகளில் பல வகையான கூலர்கள் கிடைக்கின்றன. அந்த வகையில், AC போல் சுவரில் எளிதாக மாட்டிக் கொள்ளும் ஏர் கூலர் ('Wall Mounted Air Cooler') சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. நீங்கள் அதை ஆன்லைனில் கூட மலிவான விலையில் வாங்கலாம்.

இதையும் படிங்க:  ஏசி இல்லாமலேயே அறையை குளுகுளுவென்று மாற்றலாம்! இந்த சிம்பிள் டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!

சிம்பொனி கிளவுட் பெர்சனல் கூலர் தான் AC போல் சுவரில் மாட்ட கூடிய உலகின் முதல் கூலர் என்று உங்களுக்குச் சொல்கிறோம். இந்த கூலர் பார்ப்பதற்கு போல ஏசி போல் இருக்கும் மற்றும் அதன் விலையும் மிகவும் குறைவு. அதுமட்டுமின்றி, இது மின்சார உபயோகத்தையும் குறைக்கிறது.

இதையும் படிங்க: ஏசி ஃபில்டரை ஒருபோதும் இப்படி சுத்தம் செய்யாதீங்க..! சேதமடையலாம்..!!

இந்த கூலரில் 15 லிட்டர் தண்ணீர் தொட்டி உள்ளது. இது சும்மா 2000 சதுர அடி பரப்பளவிற்கு குளிர்ச்சியை வழங்குகிறது. இதுதவிர, குளிரூட்டியில் தண்ணீர் குறைவாக இருந்தால் அலாரம் அடிக்கும் மற்றும் மோட்டார் சேதமடையாமல் தடுக்க உதவுகிறது. குறிப்பாக இது அதிக வெப்பத்தில் கூட வீட்டை குளிர்விக்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!