Watermelon : கோடையில் தர்பூசணியை அதிகம் சாப்பிடாதீங்க.. இந்த பிரச்சினைகள் வரும்.. ஜாக்கிரதை!

First Published Apr 18, 2024, 12:24 PM IST

கோடை காலத்தில் தர்பூசணி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் அதை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

கோடை காலம் நடந்து கொண்டிருக்கிறது. அனல் காற்றும், வெப்பநிலையும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. எனவே, இதிலிருந்து மீள சிறந்த வழி தர்பூசணி தான். இது உடலை குளிர்ச்சியாக வைப்பதால் மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள்.

இதில் 95% நீர், நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. சொல்லபோனால், இது ஆரோக்கியத்திற்கு அற்புதமான நன்மைகளை அள்ளிக் கொடுக்கும். ஆனால், தர்பூசணியை அதிகமாக சாப்பிட்டால் தீங்கு விளைவிக்கும் தெரியுமா..? சரி வாங்க இப்போது தர்பூசணியை அதிகம் சாப்பிட்டால் என்னென்ன பிரச்சினைகள் வரும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தர்பூசணியை அளவுக்கு அதிகமாக  சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்:

இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் : சர்க்கரை நோயாளிகள் தர்பூசணியை அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்பது நல்லது. காரணம் அதில், கிளைசெமிக் குறியீடு 70 அல்லது அதற்கு மேற்பட்டவை மற்றும் அதிக ஜி.ஐ உள்ளது. எனவே, நீரிழிவு நோயாளிகள் தர்பூசணியை அதிக அளவில் சாப்பிட்டால், அவர்களின் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்.

இருதய பிரச்சனை : தர்பூசணியில் நல்ல அளவு பொட்டாசியம் இருப்பதால், இது உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். எனவே, அதிக அளவு தர்பூசணியை சாப்பிட்டால், அது இருதய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இதனால் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு மற்றும் பலவீனமான துடிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

இதையும் படிங்க:  விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டுமா..? அப்ப உடனே இந்த பழத்தின் விதையை சாப்பிடுங்க!

செரிமான பிரச்சனை : தர்பூசணியில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. உங்களுக்கு தெரியுமா.. அதிகப்படியான நார்ச்சத்து செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதன் காரணமாக, வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

இதையும் படிங்க:  Diabetes : சர்க்கரை நோயாளிகள் தர்பூசணி சாப்பிடலாமா..? மீறினால் என்ன நடக்கும்..??

அதிக நீரேற்றம் :  தர்பூசணியில் அதிகளவு நீர்ச்சத்து உள்ளது. இது கோடைக்கு நல்லது என்றாலும் அதிகமாக எடுத்து கொண்டால், அதிகப்படியான நீரேற்றத்தை எதிர்கொள்வீர்கள். மேலும் இது உங்கள் உடலில் உள்ள நீரின் அளவை அதிகரித்து சோடியத்தின் அளவைக் குறைக்கிறது. இதன் காரணமாக வீக்கம், சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!