Diabetes In Summer : கோடையில் சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவுகள் இவையே.!!

First Published Apr 13, 2024, 7:40 PM IST

சர்க்கரை நோயாளிகள் கோடையில் சில சிறப்பு உணவுகளை சாப்பிட வேண்டும். அவற்றை உண்பதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும். அவை..
 

தற்போது கோடை காலத்தில் நடந்துகொண்டிருப்பதால், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள். வெயில் காலத்தில் அதிக சோர்வு மற்றும் சோம்பல் இருக்கும். இதனால், கிடைக்கும் உணவை சாப்பிடுகின்றனர். ஆனால் அதன் பிறகு வரும் ஆபத்தைப் பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை. 

எனவே, சர்க்கரை நோயாளிகள் கோடையில் சில சிறப்பு உணவுகளை சாப்பிட வேண்டும். அவற்றை உண்பதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும். இது உடல் சோர்வடைவதை தடுக்கும். இப்போது அந்த உணவுகள் பற்றி இங்கு பார்க்கலாம்.

கீரைகள்: சர்க்கரை நோய் இருப்பவர்கள் கோடையில் கீரையை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும். இதில் கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக இருப்பதால், இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
 

தர்பூசணி: தர்பூசணியில் உள்ள இனிப்பு இயற்கையானது. எனவே சர்க்கரை நோயாளிகள் சந்தேகமில்லாமல் கோடையில் இதை சாப்பிடலாம். இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது மற்றும் நீர்ச்சத்துக்கு குறைபாடு இல்லை.

தக்காளி: கோடையில் சர்க்கரை நோயாளிகளுக்கு தக்காளி மிகவும் நல்லது. இது அவர்களின் GI அளவைக் குறைத்து, இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது. அதனால் சர்க்கரை அளவு அதிகரிக்காது, கட்டுக்குள் இருக்கும்.

இதையும் படிங்க:  Banana For Diabetes : சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடலாமா? நிபுணர்கள் என்ன சொல்கின்றனர்?

குடை மிளகாய்: சர்க்கரை நோயாளிகள் கோடையில் எல்லா வகையான குடைமிளகாயையும் சாப்பிடலாம். இவற்றில் கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்தும் உள்ளது.  எனவே இவற்றை சாப்பிடுவதால் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவது மட்டுமின்றி, சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம்.

இதையும் படிங்க:Diabetes : சர்க்கரை நோயாளிகள் தர்பூசணி சாப்பிடலாமா..? மீறினால் என்ன நடக்கும்..??

பெர்ரி: பெர்ரிகளில் நார்ச்சத்து, பாலிபினால்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது. இவை வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கும். இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு விரைவாக உயராது. எனவே, சர்க்கரை நோயாளிகள் இதையும் கோடையில் சாப்பிடலாம். அதுமட்டுமின்றி,  சுரைக்காய், வெண்ணெய், கொய்யா, கிரீன் டீ எடுத்துக்கொள்வதும் நல்லது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!