Toor Dal Benefits : துவரம் பருப்பு நமக்கு ஒரு வரபிரசாதம்... ஏன் அப்படி தெரியுமா..?

Published : May 11, 2024, 11:22 AM ISTUpdated : May 11, 2024, 11:25 AM IST

பருப்பில் பல வகைகள் உள்ளன. ஆனால், இவற்றில் துவரம் பருப்பு தான் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. எனவே, இதை சாப்பிட்டால் என்னென்ன  நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம் வாங்க..  

PREV
16
Toor Dal Benefits : துவரம் பருப்பு நமக்கு ஒரு வரபிரசாதம்... ஏன் அப்படி தெரியுமா..?

பருப்பு புரதத்தின் நல்ல ஆதாரமாகும். இவற்றை தினமும் சாப்பிடுவதால் புரதம் மட்டுமின்றி பல சத்துக்களும் கிடைக்கும். பருப்பில் பல வகைகள் உள்ளன. ஆனால், இவற்றில் துவரம் பருப்பு தான் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. 

26

இந்த பருப்பில் கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம், தாமிரம், செலினியம், மாங்கனீஸ், புரதம் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது. சரி வாங்க.. இப்போது இந்த துவரம் பருப்பு
சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

36

துவரம் பருப்பில் நல்ல அளவு புரதச்சத்து உள்ளது. நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு புரதம் மிகவும் அவசியம். நீங்கள் சைவ உணவு உண்பவராக இருந்தால், உடலுக்குத் தேவையான புரோட்டீனைப் பெற, கண்டிப்பாக இந்த பருப்பை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

46

துவரம் பப்புவில் பல வகையான கனிமங்களும் உள்ளன. அவை எலும்புகளை வலுப்படுத்தவும், செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் பெரிதும் உதவுகிறது.  மேலும், அவை உடலுக்கு ஆற்றலை வழங்குகின்றது.

56

துவரம் பருப்பில் புரதத்துடன் நல்ல நார்ச்சத்து உள்ளது. இவை வயிற்றை நிரம்ப செய்து, அதிகமாக சாப்பிடுவதை தடுக்கிறது. இதனால், 
எடை அதிகரிப்பு கட்டுப்படுத்துகிறது. 

 

66

கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணுக்கு சரியான ஊட்டச்சத்து இல்லாதது குழந்தையின் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும். எனவே, 
கர்ப்பிணிகள் துவரம் சாப்பிட்டால் உடல் நலம் நன்றாக இருக்கும். மேலும் இந்த பருப்புஎளிதாக ஜீரணமாகும்.

click me!

Recommended Stories