எஸ்.எம்எல். இந்தியா (SML India) நிறுவனம் ஹனுமன் AI சாட்போட்டை உருவாக்க ஹெச்.பி., நாஸ்காம் மற்றும் யோட்டா ஆகிய நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த சாட்பாட் 98 மொழிகளில் வேலை செய்யக்கூடியது.
எஸ்.எம்.எல். இந்தியா நிறுவனம் ஹனூமன் AI என்ற சாட்போட்டை அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஏப்ரல் 10, 2022 வரை உள்ள தரவுகள் அடிப்படையில் இந்த சாட்போட் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த சாட்போட்டின் ப்ரோ வெர்ஷன் ஒன்றையும் அறிமுகப்படுத்த உள்ளதாகத் தெரிகிறது. அது விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஒரு வருடத்தில் 200 மில்லியன் பயனர்களை அடையும் இலக்குடன் களம் இறங்கியுள்ளது.
undefined
எஸ்.எம்எல். இந்தியா (SML India) நிறுவனம் இந்த சாட்போட்டை உருவாக்க ஹெச்.பி., நாஸ்காம் மற்றும் யோட்டா ஆகிய நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது. யோட்டா நிறுவனம் ஜிபியூ கிளவுட் உள்கட்டமைப்பை வழங்குகிறது.
வானில் வர்ணஜாலம் நிகழ்த்திய சக்திவாய்ந்த சூரியப் புயல்; பவர் கிரிட்கள் செயலிழக்க வாய்ப்பு!
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் தொடர்பான ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஆதரிக்கவும் 3000 கல்லூரிகளுக்கு ஹனுமன் AI பயன்பாட்டைக் கொண்டு சேர்க்கவும் நாஸ்காம் இணைந்துள்ளது.
ஆங்கிலம் மற்றும் தெலுங்கு இடையேயான மொழிபெயர்ப்புக்காக தெலுங்கானா அரசுடனுடம் இணைந்து இந்த சாட்பாட் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த AI சாட்பார் தற்போது 12 இந்திய மொழிகளிலும் பல உலகளாவிய மொழிகளிலும் கிடைக்கிறது. 3AI ஹோல்டிங் நிறுவனத்தின் தொழில்நுட்பப் பங்களிப்புடன் இயக்கப்படுகிறது.
ஹனூமன் சுகாதாரம், நிர்வாகம், நிதிச் சேவைகள் மற்றும் கல்வித் துறை சார்ந்த பதில்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 3AI ஹோல்டிங்கின் நிர்வாக இயக்குனர் அர்ஜுன் பிரசாத் கூறுகையில், ஹனுமன் AI ஒவ்வொரு இந்தியருக்கும் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
வாட்ஸ்அப் தொல்லையா மாறிருச்சா! இதை செஞ்சு பாருங்க... ரிலாக்ஸா இருக்கலாம்...