Vivo : பலரும் எதிர்பார்த்த Vivo X Fold 3 Pro.. சீக்கிரமே இந்தியாவில் அறிமுகமாகும் - ஸ்பெக் & விலை இதோ!

By Ansgar R  |  First Published May 10, 2024, 6:58 PM IST

Vivo X Fold 3 Pro : விவோ நிறுவனத்தின் இந்த புதிய போன் கடந்த மார்ச் மாதம் சீனாவில் வெளியிடப்பட்டது. இப்போது, ​​விவோ மடிக்கக்கூடிய தனது தொலைபேசியை இந்தியாவில் வெளியிட தயாராகி வருவதாக கூறப்படுகிறது.


சீன தொழில்நுட்ப பிராண்டான விவோ, இன்னும் இந்த போன் எப்போது வெளியாகும் என்ற காலக்கெடுவை உறுதிப்படுத்தவில்லை. ஆனால் வெளியான ஒரு அறிக்கையின்படி அடுத்த மாதம் (ஜூன்) அதிகாரப்பூர்வமாக அது வெளியாகும் என்று அறிவித்துள்ளது. Vivo X Fold 3 Pro Qualcomm's Snapdragon 8 Gen 3 SoCல் இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இது 120Hz Refresh Rateடுடன் 8.03-இன்ச் AMOLED உள் திரையைக் கொண்டுள்ளது. இது Zeiss-பிராண்டட் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது மற்றும் 16GB வரை ரேம் மற்றும் 1TB வரையிலான சேமிப்பகத்தைக் கொண்டுள்ளது என்று ஏற்கவே இந்த போன் குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளது. விவோவின் மடக்கக்கூடிய போனாக இது இருக்கும்.

Tap to resize

Latest Videos

undefined

வாட்ஸ்அப் தொல்லையா மாறிருச்சா! இதை செஞ்சு பாருங்க... ரிலாக்ஸா இருக்கலாம்...

சீனாவில் வெளியான இந்த Vivo X Fold 3 Pro ஆனது ஆண்ட்ராய்டு 14 உடன் இயங்கும் OriginOS 4 உடன் அறிமுகமானது. இது 8.03-இன்ச் முதன்மை 2K (2,200x2,480 பிக்சல்கள்) E7 AMOLED டிஸ்ப்ளே மற்றும் 6.53-இன்ச் (1,172x2,748 பிக்சல்கள்) AMOLED கவர் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இரண்டு திரைகளும் 120Hz Refresh வீதத்தை ஆதரிக்கின்றன. 

மேலும் இது Snapdragon 8 Gen 3 SoC உடன் 16GB வரை LPDDR5X ரேம் மற்றும் 1TB வரை UFS4.0 சேமிப்பகத்துடன் இயங்குகிறது. இது விவோ வி3 இமேஜிங் சிப் மற்றும் கார்பன் ஃபைபர் கீல் உடன் வருகிறது, இது TUV ரைன்லேண்டால் 5,00,000 மடிப்புகளைத் தாங்கும் என்று சான்றளிக்கப்பட்டது என்பது இதன் சிறப்பு அம்சமாக பார்க்கப்படுகிறது.

விவோ எக்ஸ் ஃபோல்ட் 3 ப்ரோவில் 50 மெகாபிக்சல் பிரதான கேமராவை உள்ளடக்கிய டிரிபிள் ரியர் கேமரா அமைப்பை விவோ பேக் செய்துள்ளது. வெளிப்புற மற்றும் உள் திரைகள் இரண்டும் 32 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டர்களைக் கொண்டுள்ளன. இது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IPX8 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. இந்திய சந்தையில் 1.17 முதல் 1.5 லட்சம் என்ற விலையில் இது அறிமுகமாகலாம்.

Mobile Users Alert : Xiaomi, Redmi, Poco.. மொபைல் வைத்திருப்பவரா நீங்கள்? உஷாரா இருங்க மக்களே..

click me!