Beauty Tips : அடிக்கும் வெயிலில் முகம் பளபளக்க.. இந்த 3 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணுங்க..!

First Published Mar 23, 2024, 4:53 PM IST

கோடையில் உங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கவும், எல்லா வகையான சருமத்திற்கும் சிறந்ததாக இருக்கும் சில வீட்டு ஃபேஸ் பேக்குகளை பற்றி இங்கே பார்க்கலாம்.
 

கோடை காலம் ஆரம்பமாகிவிட்டது. இதனால் சருமத்தில் அதிக சிறப்பு கவனம் தேவை. இந்த பருவத்தில், சருமத்தை ஒழுங்காக கவனித்துக்கொள்ளவில்லை என்றால், முகத்தில் கரும்புள்ளிகள் மற்றும் நேர்த்தியான கோடுகள் வந்துவிடும். இன்னும் சிலருக்கோ வெயிலின் தாக்கத்தால் சுருக்கங்கள் கூட வர வாய்ப்பு அதிகம். இதனால் முகம் எப்போதுமே, பார்ப்பதற்கு மந்தமாகவும் சோர்வாகவும் இருக்கும். அதுமட்டுமின்றி, வெப்பத்தின் தாக்கத்தால் சருமத்தில் பல்வேறு பிரச்சினைகளும் வர தொடங்கும்.

இந்நிலையில், நாம் நம்முடைய முகத்தை எப்போதும் நீரேற்றமாக வைத்தால் இந்த மாதிரியான சரும பிரச்சினைகள் வராது. அதற்காக நாம் பார்லருக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து உங்கள் முகத்தை இந்த கோடையிலும் அழகாக மாற்றலாம். எனவே, இன்று உங்களுக்காக வீட்டிலேயே செய்ய கூடிய பேஸ் பேக்குகளை பற்றி கூறவுள்ளோம். அதை செய்வது மிகவும் எளிது மற்றும் உங்கள் சருமத்தை ஊட்டமளிக்கும் மற்றும் நீரேற்றத்துடன் வைத்திருக்கும். குறிப்பாக, இது அனைத்து தோல் வகைகளுக்கும் நல்லது. 

தேன் - பால் ஃபேஸ் பேக்: தேன் - 2 ஸ்பூன், பால் - 2 ஸ்பூன். இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க முதலில் தேவையான அளவு பால் எடுத்து அதில் தேன் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். 30 நிமிடங்கள் கழித்து சுத்தமான தண்ணீரில் முகத்தை கழுவவும். இது உங்கள் முகத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றும். 

இதையும் படிங்க: கோடையில் சருமம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? அப்போ இந்த தவறுகளை செய்யாதீங்க..!!

எலுமிச்சை - உருளைக்கிழங்கு ஃபேஸ் பேக்: உருளைக்கிழங்கு சாறு - 2 டீஸ்பூன், எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன். இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு சாற்றையும் ஒன்றாக கலக்கி முகத்தில் தடவி கைகளால் லேசாக மசாஜ் செய்யவும். பம்30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பிறகு முகத்தை கழுவவும். இது பளபளப்பான சருமத்திற்கு சிறந்தது . இதை தொடர்ந்து செய்து வந்தால், சூரிய ஒளியின் தாக்கத்தால் உங்கள் சருமம் வறண்டு அல்லது கருமையாக மாறாது. அதுமட்டுமின்றி, இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள கறைகள் மற்றும் கருவளையங்களைப் போக்க உதவும்.

இதையும் படிங்க: Summer Tips: கொளுத்தும் வெயிலால் முகக்கருமையா..? சருமத்தை பாதுகாக்க நச்சுனு நாலு வீட்டு வைத்திய குறிப்புகள்...

பாதாம் - வாழைப்பழம் ஃபேஸ் பேக்: வாழைப்பழம்- 1/2, பாதாம் தூள் - 1/2 டீஸ்பூன். இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க முதலில், வாழைப்பழத்தை பேஸ்ட் போல் கிடைக்கும் வரை பிசைந்து கொள்ளவும். இப்போது அதில் பாதாம் தூள் சேர்க்கவும். உங்களிடம் பாதாம் தூள் இல்லையென்றால், ஓட்ஸ் சேர்க்கலாம். பிறகு அதை முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதனால் முகம் பிரகாசமாக மாறும். இதை வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால், கோடை முக வறட்சியை எதிர்த்து முகத்தை பளபளப்பாக மாற்றும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!