இதென்ன புது டிரெண்டா இருக்கு? படம் ரிலீஸ் ஆகும் முன்பே ஸ்டார் பட இயக்குனருக்கு தயாரிப்பாளர் தந்த காஸ்ட்லி Gift

First Published Apr 22, 2024, 2:27 PM IST

கவின் நடிப்பில் உருவாகி இருக்கும் ஸ்டார் திரைப்படத்தின் இயக்குனர் இளனுக்கு அப்படத்தின் தயாரிப்பாளர் காஸ்ட்லி கிப்ட் ஒன்றை கொடுத்திருக்கிறார்.

கவினின் ஸ்டார்

டாடா திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் கவின் நடிக்கும் படங்கள் மீது அதிகளவில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அவர் நடிப்பில் தற்போது ஸ்டார் திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தை பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குனர் இளன் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் கவினுக்கு ஜோடியாக அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன் ஆகியோர் நடித்துள்ளனர். அனுபவ நடிகர் லால் இப்படத்தில் நடிகர் கவினின் தந்தையாக நடித்திருக்கிறார்.

ஸ்டார் ரிலீஸ் தேதி

ஸ்டார் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இப்படத்தின் பாடல்களும் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஸ்டார் திரைப்படம் வருகிற மே மாதம் 10-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்திற்கு போட்டியாக சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள இங்க நான் தான் கிங்கு திரைப்படமும், அமீர் நாயகனாக நடித்துள்ள உயிர் தமிழுக்கு ஆகிய திரைப்படமும் ரிலீஸ் ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்... Mankatha : ரீ-ரிலீஸிலும் வசூல் போட்டி... கில்லி உடன் மல்லுக்கட்ட வருகிறது மங்காத்தா - எப்போ ரிலீஸ் தெரியுமா?

ஸ்டார் படத்துக்கு எகிறும் எதிர்பார்ப்பு

ஸ்டார் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அதிகளவு எதிர்பார்ப்பு உள்ளது. ஏனெனில் இப்படத்தின் இயக்குனர் இளன் மற்றும் நடிகர் கவின் இருவருமே பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்களை கொடுத்த பின்னர் இப்படத்தில் இணைந்துள்ளனர். இதனால் ஸ்டார் படமும் ரசிகர்களை நிச்சயம் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சாகர் பெண்டெலா தயாரித்துள்ளார். இவர் இதற்கு முன்னர் கிருத்திகா உதயநிதி இயக்கிய பேப்பர் ராக்கெட் என்கிற வெப் தொடரை தயாரித்து இருந்தார்.

இயக்குனர் இளனுக்கு கிடைத்த காஸ்ட்லி கிஃப்ட்

ஸ்டார் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே அப்படத்தின் இயக்குனர் இளனுக்கு தயாரிப்பாளர் சாகர் காஸ்ட்லி கிஃப்ட் ஒன்றை கொடுத்திருக்கிறார். வழக்கமாக படம் ஹிட் ஆனால் இயக்குனர் காரோ, அல்லது பைக்கோ பரிசளிப்பார்கள். ஆனால் ஸ்டார் பட தயாரிப்பாளர் இயக்குனர் இளனுக்கு ஐதராபாத்தில் ஒரு பிளாட் இடம் வாங்கி கொடுத்திருக்கிறார். படத்தை பார்க்க அழைத்தபோது இந்த சர்ப்ரைஸ் கிப்ட்டை தயாரிப்பாளர் தனக்கு கொடுத்ததாக இளன் நெகிழ்ச்சியுடன் கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள்... Thalaivar 171 : ரஜினியுடன் இணையும் ரட்சகன்... தலைவர் 171 படத்தில் மற்றுமொரு மாஸ் நடிகரை களமிறக்கிய லோகி

click me!