Women Directors: சோதனைகளை கடந்து... தமிழ் சினிமாவின் தன்னம்பிக்கை தூண்களாக மாறிய பெண் இயக்குனர்கள்!

First Published Jan 23, 2024, 10:19 PM IST

பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே அதிகம் ஆதிக்கம் செய்யும், சினிமா இயக்குனர் பிரிவில் தங்களையும் இணைத்து கொண்டு, சோதனைகளை கடந்து சாதித்த பெண் இயக்குனர்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.
 

சுதா கொங்கரா:

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுதா கொங்கரா, பிரபல இயக்குனர் மணிரத்னத்திடம் உதவியாளராக பணியாற்றியவர். சில படங்களில் ஸ்கிரீன் பிலே ரைட்டராக பணியாற்றிய அனுபவத்தை கொண்டு தெலுங்கு திரையுலகில் இயக்குனராக அவதாரம் எடுத்தார். பின்னர், தமிழில் துரோகி படத்தின் மூலம் இயக்குரனாக மாறிய சுதா, 2016 ஆம் ஆண்டு வெளியான இறுதி சுற்று திரைப்படத்தின் மூலம் அதிகம் கவனிக்கப்பட்ட பெண் இயக்குனராக மாறினார்.இதை தொடர்ந்து சூர்யாவை வைத்து இவர் இயக்கிய 'சூரரை போற்று' திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது மட்டும் இன்றி, தேசிய விருதையும் இவருக்கு பெற்று தந்தது.

லட்சுமி ராமகிருஷ்ணன்:

எத்தனை விமர்சனங்கள் எதிர்கொண்டு வந்தாலும்... அதனை அடித்து துரத்திவிட்டு, தன்னுடைய நோக்கத்தில் மிகவும் கவனமாக இருப்பவர் என்றே இவரை சொல்லலாம். மலையாளத்தில் நடிகர் திலீப் நடித்த 'சக்கர முத்து' என்கிற படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, பின் தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்தார்.

இவருக்கு நடிப்பில் கிடைக்காத பாராட்டுகளையும், பிரபலத்தையும் தேடி கொடுத்தது 'சொல்வதெல்லாம் உண்மை' என்கிற பஞ்சாயத்து நிகழ்ச்சி தான். நடிப்பை தொடர்ந்து அதிரடியாக இயக்குனராக களமிறங்கிய லட்சுமி ராமகிருஷ்ணன்... விஜி சந்திரசேகரை கதையின் நாயகியாக வைத்து 'ஆரோகணம்' என்றும் படத்தை இயக்கி பாராட்டுகளை பெற்றார். இதை தொடர்ந்து நெருங்கிவா முத்தமிடாதே, அம்மணி, ஹவுஸ் ஓனர் போன்ற படங்களை இயக்கினார் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஆர் யூ ஓகே பேபி திரைப்படம் உண்மை கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை குவித்தது குறிப்பிடத்தக்கது.

Nadiya Daughters Photo: அழகில் அம்மாவை மிஞ்சிய நதியாவின் மகள்கள்.. ஹீரோயின் போல் இருக்கும் ரீசென்ட் போட்டோஸ்!

புஷ்கர் - காயத்ரி!

கணவன் மனைவியாக ஒன்று கூடி சாதித்த பெருமை இந்த தம்பதியை சேரும். 'ஓரம் போ' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர்கள், இதை தொடந்து மாதவன் மற்றும் விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய 'விக்ரம் வேதா' தாறு மாறு ஹிட் அடித்தது. பிரபல ஓடிடி தளத்திற்கு வெப் சீரிஸ் இயக்கி வரும் இவர்கள், விரைவில் பிரபல நடிகரை வைத்து படம் இயக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
 

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய முன்னாள் கணவர் தனுஷை ஹீரோவாக வைத்து இயக்கிய திரைப்படம் 3. இதை தொடந்து வை ராஜா வை என்கிற படத்தை இயக்கினார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர்... கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள 'லால் சலாம்' படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

நான் PR மூலமா தான் ஜெயிச்சேன்! இந்த ட்விஸ்டை எதிர்பாக்கல.. மாயா - பூர்ணிமாவுக்கு பளார் பதிலடி கொடுத்த அர்ச்சனா

Soundarya

சொந்தர்யா ரஜினிகாந்த்:

அக்கா ஐஸ்வர்யாவை தொடர்ந்து, தமிழ் சினிமாவில் பெண் இயக்குனராக அவதாரம் எடுத்தவர்... சௌந்தர்யா ரஜினிகாந்த். 2014-ஆம் ஆண்டு 3டி அனிமேஷன் படமான கோச்சடையான் படத்தை இயக்கினார். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை தராத நிலையில்... இதை தெடர்ந்து அக்கா கணவர் தனுஷை ஹீரோவாக வைத்து, 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தை இயக்கி இருந்தார். இப்படம் முதலுக்கு மோசம் இல்லாமல் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

பிரியா வி:

இயக்குனர் மணிரத்னத்திடம் துணை இயக்குனராக இருந்து, பின்னர் இயக்குனராக மாறியவர் தான் இயக்குனர் ப்ரியா.  2005 ஆம் ஆண்டு வெளியான, 'கண்ட நாள் முதல்' படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமான இவர், இதை தொடர்ந்து கண்ணாமூச்சி ஏனடா, ஹீரோவா? ஸிரோவா போன்ற படங்களை இயக்கினார். கடைசியாக, ஜீ ஓடிடி தளத்திற்கு 'ஆனந்தம்' என்கிற வெப் சீரிஸ் ஒன்றை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை விஜி சந்திரசேகரின் மகளுக்கு நடந்து முடிந்த திருமணம்! சூர்யா, உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நேரில் வாழ்த்து

ஹலீதா ஷமீம்: 

பூவரம் பீபீ படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்த ஹலீதா, இதை தொடந்து இவர் இயக்கிய சில்லு கருப்பட்டி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்னர் புத்தம் புது காலை விடியாதா, மின்மினி படங்களை இயக்கிய போதும்... இதுவரை அதிகம் கவனிக்கப்படாத இயக்குனர்களில் ஒருவராகவே உள்ளர்.

க்ரித்திகா உதயநிதி:

நடிகரும் , தயாரிப்பாளருமான உதயநிதியின் மனைவியான கிருத்திகா... தமிழில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான 'வணக்கம் சென்னை படத்தின்' மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதை தொடர்ந்து விஜய் ஆண்டனியை ஹீரோவாக வைத்து காளி எங்கிற படத்தை இயக்கி இருந்தார். கடந்த ஆண்டு இவர் இயக்கிய 'பேப்பர் ராக்கெட்' என்கிற வெப் சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது காதலிக்க நேரமில்லை என்கிற படத்தை இயக்கி வருகிறார்.

முழு முதுகை காட்டி ஹாட் போஸ்.. கவர்ச்சியில் டாப் ஸ்பீடில் செல்லும் யாஷிகா ஆனந்த் - லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ!

ஸ்ரீ ப்ரியா:

தமிழில் சுமார் 150 படங்களுக்கு மேல் நடித்து பிரபலமானவர் ஸ்ரீ ப்ரியா. அதே போல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ஒரு நடிகை என்பதை தாண்டி, 1984-ஆம் ஆண்டு சாந்தி முகூர்த்தம் என்கிற படத்தை இயக்கினார். இதை தொடர்ந்து, எங்க ஊரு ஆட்டுக்காரன், நாகினி, நானே வருவேன், மாலினி 22, திரிஷ்யம் தெலுங்கு ரீமேக் போன்றவற்றை இயக்கி உள்ளார் என்பது குறிபிடித்தக்கது.

மேலும் இவர்கள் அனைவருமே... பெண்களால் முடியாது என ஒரு காலத்தில் பார்க்கப்பட்ட இந்த இயக்குனர் பணியை சிறப்பாக செய்து, பல தடைகளை கண்டது வெற்றி பெற்றவர்கள் என்பதும், வருங்காலத்தில் இயக்குனராக மாற துடிக்கும் பலருக்கு தூண்டுகோலாக இருப்பவர்கள் என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை.

click me!