Puri Jagannath: பூரி ஜெகன்னாதர் கோவிலின் சிறப்பம்சங்கள்..தீராத வினையெல்லாம் தீரும், வாழ்வில் நடக்கும் அற்புதம்

First Published Jun 27, 2022, 11:26 AM IST

Puri Jagannath-Jagannath Rath Yatra 2022 (பூரி ஜெகநாதர் தேர் திருவிழா) பூரி இந்து பாரம்பரியத்தின் புனிதத் தலங்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் பல்லாயிரம் பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.

Jegannath temple

ஜகன்னாதர், தேவி சுபத்ரா மற்றும் பலபத்ராவின் தேர் திருவிழா என்றும் அழைக்கப்படும் ரத யாத்திரை, ஒடிசாவின் பூரி நகரத்தில் நடைபெறும் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான இந்து திருவிழாவாகும். இது இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள மிகப் பழமையான ரத யாத்திரையாகும். பூரி இந்து பாரம்பரியத்தின் புனிதத் தலங்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் பல்லாயிரம் பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் சுக்ல பக்ஷத்தின் இரண்டாம் நாளில் நடைபெறும்.

Jegannath temple

42 நாட்கள் நடக்கும் இந்த உற்சாக விழாவில், வருகிற ஜூலை 1 ஆம் தேதி தேர் திருவிழா ஆரம்பமாகிறது.இந்த நேரத்தில் கோயிலுக்குச் செல்வது குறிப்பாக மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.

 மேலும் படிக்க....Jegannath Temple: களைகட்டும் ஜெகன்னாதர் கோவில் தேர் திருவிழா...நேரம், தேதி எப்போது..? முழு விவரம் உள்ளே...
 

Jegannath temple

ஒடிசாவின் இந்த அற்புதமான நகரத்தில் பழங்கால யாத்திரை தளங்கள் மற்றும் அழகான கடற்கரைகள் ஏராளமாக உள்ளன.  அதேபோன்று, கோவில் இருக்கும் பூரி என்ற ஊரின் எந்த இடத்தில், எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும் கோவிலின் உச்சியில் இருக்கும் சுதர்சன சக்கரம் நம்மை பார்ப்பது போலவே இருக்கும்.

 மேலும் படிக்க....Jegannath Temple: களைகட்டும் ஜெகன்னாதர் கோவில் தேர் திருவிழா...நேரம், தேதி எப்போது..? முழு விவரம் உள்ளே...

Jegannath temple

பொதுவாக காலையிலிருந்து மாலை வரையான நேரங்களில் காற்று கடலில் இருந்து நிலத்தை நோக்கியும் மாலை முதல் இரவு முழுவதும் நிலத்திலிருந்து கடலை நோக்கியும் வீசும். ஆனால் பூரியில் இதற்கு நேர் எதிராக நடக்கும். சிங்கத் துவாராவின் முதல் படியில் கோவிலின் உட்பறமாக காலெடுத்து வைத்து நுழையும் போது கடலில் இருந்து வரும் எந்த விதமான சப்தமும் நமக்கு கேட்காது.

Jegannath temple

இக்கோவிலின் முக்கிய கோபுரத்தின் நிழல் பகலில் எந்த நேரத்திலும் கண்களுக்கு தெரிவதில்லை. அதே போன்று, இந்த கோவிலின் மேல் விமானங்களோ அல்லது பறவைகளோ மறப்பதில்லை. திருவிழாவில் ஜகன்னாதர் தேர்களில் வர்ணம் பூசப்பட்ட, லட்சக்கணக்கான பக்தர்கள் கோஷமிடும் இசை மற்றும் சங்குகள் முழங்க திருவிழா களைக்கட்டுவது  பூரியின் குறிப்பிடத்தக்க அனுபவத்தின் ஒரு பகுதியாகும்.

 மேலும் படிக்க....Jegannath Temple: களைகட்டும் ஜெகன்னாதர் கோவில் தேர் திருவிழா...நேரம், தேதி எப்போது..? முழு விவரம் உள்ளே...

click me!