முதன்முறையாக சீயான் விக்ரமுக்கு வில்லனாக நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா... அதுவும் இவர் டைரக்‌ஷன்லயா?

First Published Feb 9, 2024, 2:11 PM IST

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சீயான் விக்ரம் அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படத்தில் அவருக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்க உள்ளாராம்.

SJ Suryah, VIkram

தமிழ் திரையுலகில் எந்த வித ரோல் கொடுத்தாலும் அதை அசால்டாக செய்து அப்ளாஸ் வாங்குபவர் தான் சீயான் விக்ரம். கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக விதவிதமான கெட் அப்களில் நடிக்கும் நடிகரும் இவர் தான். அதுமட்டுமின்றி தன் உடலை வறுத்திக்கொண்டு நடிக்கும் நடிகர்களில் விக்ரமை மிஞ்சியவர்கள் யாரும் இருக்க முடியாது என சொல்லும் அளவுக்கு பல்வேறு படங்களில் அவ்வாறு நடித்திருக்கிறார். அந்த அளவுக்கு சினிமாவின் மீது காதல் கொண்டவராக விக்ரம் உள்ளார்.

Chiyaan Vikram

அவர் நடிப்பில் தற்போது தங்கலான் திரைப்படம் உருவாகி உள்ளது. பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்திற்காக 20 கிலோ வரை உடல் எடையை குறைத்து நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இதனிடையே சீயான் விக்ரம் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அப்படத்திற்கு தற்காலிகமாக சீயான் 62 என பெயரிடப்பட்டு உள்ளது. 

இதையும் படியுங்கள்... டெக்னாலஜியில் அடுத்த லெவலுக்கு செல்லும் கோலிவுட்.. டீ ஏஜிங் தொழில்நுட்பத்துடன் தயாராகும் 4 தரமான தமிழ் படங்கள்

Vikram, SU Arunkumar

சீயான் 62 திரைப்படத்தை அருண்குமார் இயக்குகிறார். இவர் கடந்த ஆண்டு சித்தார்த் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன சித்தா படத்தை இயக்கியவர் ஆவார். அதற்கு முன்னர் விஜய் சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத் போன்ற திரைப்படங்களை அருண்குமார் இயக்கி இருந்தார். அவர் இயக்கத்தில் உருவாக உள்ள ஐந்தாவது திரைப்படம் தான் சீயான் 62. இப்படத்தை HR பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

chiyaan 62 Villain SJ Suryah

இந்த நிலையில், சீயான் 62 படத்தில் வில்லனாக நடிக்கும் நடிகர் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்டை படக்குழு வெளியிட்டு உள்ளது. அதன்படி நடிகர் எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்து உள்ளது. இதன்மூலம் நடிகர் விக்ரமுக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் முதல் படமாக சீயான் 62 அமைந்துள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்க உள்ளதாகவும் அறிவித்து உள்ளனர். 

இதையும் படியுங்கள்... துருவ நட்சத்திரத்தை போல் மீண்டும் மீண்டும் தள்ளிவைக்கப்படும் தங்கலான் - ஏப்ரல் ரிலீஸில் இப்படி ஒரு சிக்கலா?

click me!