Don Day2 Box Office: இரண்டாம் நாள் முடிவில் பட்டையை கிளப்பும் டான் வசூல்..ப்ளாக்பஸ்டர் லிஸ்டில் பிரமாண்ட சாதனை

First Published May 15, 2022, 1:02 PM IST

Don Day2 Box Office collection: சிவகார்த்திகேயன் நடிப்பில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் பிரம்மாண்டமாக வெளியான டான், படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்று வருகிறது.

DON

அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ள படம் டான். இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.  இந்த படத்திலிருந்து முன்னதாக அனிரூத் இசையமைப்பில் 3 பாடல்கள் வெளியாகி வைரலாகின.
 

DON

சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரடக்‌ஷன்ஸ் நிறுவனமும், லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்த இப்படத்தை தமிழகம் முழுவதும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
 

DON

இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் சிவாங்கி, மிர்ச்சி விஜய், முனீஸ்காந்த், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி பால சரவணன், உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்த திரைப்படம் கலவையான விமர்சங்களை பெற்று தந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

DON

இந்நிலையில் சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் தற்போது விஜய், அஜித்திற்கு இணையாகவே தமிழ் சினிமாவில் பட்டைய கிளப்பி வருகிறது. தற்போது, இரண்டாம் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் தமிழ்நாட்டில் மட்டும்  ரூ 20 கோடி வசூலை கடந்துள்ளது. 

DON

அதேபோன்று, உலகம் முழுவதும் இப்படம் ரூ 32 கோடி வசூல் செய்துள்ளதாம். இன்று விடுமுறை நாள் என்பதால் முதல் இரண்டு நாட்களை விட நாளை அதிக அளவு வசூல் செய்யும் என்றும், இதே நிலை நீடித்தால் வரும் நாட்களில் இப்படம் ரூ 100 கோடி வசூலை தாண்டும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கூறுகின்றது.

 மேலும் படிக்க ....AK 61 Update: AK 61 படத்தில் அஜித் இதற்கெல்லாம் 'நோ' சொல்லி விட்டாரா..? அப்டேட் கேட்டு ஷாக்கான ரசிகர்கள்...

click me!