சன் டிவி சீரியல்களை பின்னுக்கு தள்ளி விறுவிறுவென முன்னேறிய விஜய் டிவி சீரியல்... டாப் 10 டிஆர்பி லிஸ்ட் இதோ

First Published Apr 13, 2024, 9:27 AM IST

சன் டிவி சீரியல்களின் டிஆர்பி படிப்படியாக குறையத் தொடங்கி உள்ள நிலையில், விஜய் டிவி சீரியல் ஒன்று அசால்டாக முன்னேறி இருக்கிறது.

Top 10 serial TRP

சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கிறது என்பது அதன் டிஆர்பி விவரங்கள் மூலம் தான் கணிக்கப்படுகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டின் 14-வது வாரத்திற்கான டாப் 10 சீரியல்களின் டிஆர்பி பட்டியல் வெளியாகி இருக்கிறது. அதில் வழக்கம்போல் சன் டிவி சீரியல்களே ஆதிக்கம் செலுத்தினாலும், அவற்றை எல்லாம் பின்னுக்கு தள்ளி விஜய் டிவி சீரியல் ஒன்றும் மாஸான டிஆர்பி ரேட்டிங்கை பெற்று இருக்கிறது. அந்த பட்டியலை விரிவாக பார்க்கலாம்.

Top 10Tamil Serial

டிஆர்பி பட்டியலில் விஜய் டிவியில் புதிதாக தொடங்கப்பட்ட சின்ன மருமகள் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ஆகிய சீரியல்கள் கடைசி இரண்டு இடங்களை பிடித்துள்ளன. குறிப்பாக 10வது இடத்தில் உள்ள சின்ன மருமகள் சீரியலுக்கு 5.45 டிஆர்பி புள்ளிகளும், 9ம் இடத்தில் உள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலுக்கு 5.98 டிஆர்பி புள்ளிகளும் கிடைத்துள்ளன. இதற்கு அடுத்தபடியாக பாக்கியலட்சுமி சீரியல் 7.02 டிஆர்பி புள்ளிகளுடன் 8வது இடத்தை பிடித்திருக்கிறது.

இதையும் படியுங்கள்... Sabdham : மாறுபட்ட வேடத்தில் சிம்ரன்.. மிரட்டும் லட்சுமி மேனன் - த்ரில்லிங் அனுபவம் தரும் "சப்தம்" - டீஸர் இதோ

siragadikka aasai

இதற்கு அடுத்தபடியாக சன் டிவியில் கேப்ரியல்லா நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி 2 சீரியல் 7.18 டிஆர்பி புள்ளிகளுடன் 7ம் இடத்தில் உள்ளது. அதேபோல் ஆலியா மானசா நடித்து வரும் இனியா சீரியலுக்கு 7.49 புள்ளிகளுடன் ஆறாம் இடம் கிடைத்து இருக்கிறது. விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல் 7.73 டிஆர்பி புள்ளிகளை பெற்று இந்த வார டாப் 10 பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.

singapenne

வழக்கமாக சன் டிவி சீரியல்கள் தான் டாப் 5 இடங்களை ஆக்கிரமித்து இருக்கும். ஆனால் இந்த முறை அதையெல்லாம் பின்னுக்கு தள்ளி 8.19 புள்ளிகளுடன் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் நான்காம் இடத்தை பிடித்துள்ளது. முதல் மூன்று இடங்களை சிங்கப்பெண்ணே, கயல் மற்றும் எதிர்நீச்சல் ஆகிய சீரியல்கள் பிடித்துள்ளன. இதில் எதிர்நீச்சலுக்கு 8.67 புள்ளிகளும், கயல் சீரியலுக்கு 8.92 டிஆர்பி புள்ளிகளும், சிங்கப்பெண்ணே சீரியலுக்கு 9.46 புள்ளிகளும் கிடைத்துள்ளது.

இதையும் படியுங்கள்... Rajinikanth : ஜெயிலர் 2.. படத்தின் டைட்டில் என்னவாயிருக்கும்? ஷூட்டிங் எப்போது? நெல்சன் போடும் மாஸ்டர் பிளான்!

click me!