கோலிவுட்டில் தற்போது ஹாட் டாப்பிக் ஆக இருப்பது ஜெயம் ரவியின் விவாகரத்து பற்றிய செய்திகள் தான். அவர் தயாரிப்பாளர் சுஜாதாவின் மகளான ஆர்த்தியை கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு 2 மகன்களும் உள்ளனர். இதனிடையே திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகும் நிலையில், ஜெயம் ரவி - ஆர்த்தி ஜோடி விவாகரத்து செய்து பிரிய முடிவெடுத்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் ஒரு தகவல் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
24
Jayam Ravi wife Aarti
ஜெயம் ரவி - ஆர்த்தி ஜோடிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதற்கு அவரது மாமியார் சுஜாதா தான் காரணம் என்றும் கூறப்பட்டது. இப்படி விவாகரத்து மேட்டர் பூதாகரமாக வெடித்து வரும் நிலையில், சமீபத்தில் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து ஜெயம் ரவி உடன் தான் ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நீக்கினார். அவரின் இந்த செயல் விவாகரத்து மேட்டரை மேலும் பரபரப்பாக்கியது.
இந்த நிலையில் ஜெயம் ரவி - ஆர்த்தி ஜோடியின் விவாகரத்து விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய பாடகியான சுசித்ரா பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியதாவது : “இந்த விவகாரத்தில் என்னுடைய ஆதரவு ஜெயம் ரவிக்கு தான். ஆர்த்தி மிகவும் ஆடம்பரமான பெண், அவருடன் வாழவே முடியாது. அவருக்காக ஜெயம் ரவி இரவும் பகலும் வேலை பார்க்கணும். அப்படி வேலை பார்த்துவிட்டு வீட்டுக்கு போனாலும் ஆர்த்தி என்ன மனநிலையில் இருப்பாரென்றே தெரியாது.
44
Suchitra says about Jayam Ravi wife Aarti
ஆர்த்தி அழகாக இருந்ததால் அவரது முகத்தை பார்த்துக் கொண்டே இத்தனை ஆண்டுகள் வாழ்ந்துவிட்டார் ஜெயம் ரவி. அந்த அழகு எத்தனை நாளைக்கு இருக்கும். அதுமட்டுமின்றி சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர்கள் தான் ஜெயம் ரவி குடும்பத்தினர். அவர்கள் எப்போதும் மற்றவர்களை மதிப்பவர்கள் என்று ஜெயம் ரவிக்கு சப்போர்ட்டாக பேசி இருக்கிறார் சுசித்ரா. அவரின் இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகிறது.