Simbu Photos: STR 48 டிராப்பா? தீயாய் பரவிய வதந்தி...! சைலண்டாக சிம்பு செய்த செயல்..! வைரலாகும் போட்டோஸ்!

First Published Feb 9, 2024, 3:38 PM IST

நடிகர் சிம்பு இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடித்து வரும், எஸ்டிஆர் 48 படம் டிராப்பானதாக ஒரு வதந்தி சமூக வலைதளத்தில் பரவி வந்த நிலையில்... இதற்கு சைலன்டாக பதிலடி கொடுத்துள்ளார் சிம்பு.
 

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், என பன்முக கலைஞராக இருக்கும் டி ராஜேந்திரனின் மூத்த மகன் சிம்பு. 40 வயதிற்கு மேலாகியும் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் சிம்பு, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக அவதாரம் எடுத்தவர். சிம்பு ஆரம்பத்தில் பல ஹிட் படங்களில் நடித்திருந்தாலும், இடையில் இவரின் போறாத நேரம்...  சில காரணங்களால் இவரது பெயர் கோலிவுட் திரை உலகில் டேமேஜ் ஆனதோடு, திரைப்படங்களும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாமல் போனது.

இதைத்தொடர்ந்து 'மாநாடு' படத்தின் வெற்றிக்குப் பின்னர் மீண்டும் தன்னுடைய செகண்ட் இன்னிங்சை தொடங்கியுள்ள சிம்பு, திரைக்கதை தேர்வில் மிகுந்த அக்கறை காட்டுவதோடு மட்டுமின்றி.. முடிந்தவரை எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காமல் இருந்து வருகிறார். 

எங்கள் நோக்கம் லாபம் இல்லை! இலவச மெட்ரோ வசதியுடன்.. சந்தோஷ் நாராயணன் நடத்தும் ‘நீயே ஒளி' இசை நிகழ்ச்சி!
 

simbu

சிம்பு இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் நடித்த 'வெந்து தணிந்தது காடு', ஒப்பிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடித்த 'பத்து தல' படங்களின் வெற்றிக்கு பின்னர், தற்போது இளம் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், கமல் தயாரிப்பில் உருவாக்கி வரும் 48வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் துவங்கியதாக கூறப்பட்ட நிலையில், தற்போது வரை எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. மேலும் சிம்பு தரப்பில் இருந்தும் படம் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாததால் இந்த படம் டிராப் ஆகிவிட்டதாக சில வதந்திகள் பரவத் துவங்கியது.
 

இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், தற்போது சிம்பு தன்னுடைய இப்படத்திற்காக உடலை ஃபிட்டாக மாற்ற பாங்காங் புறப்பட்டு சென்றுள்ளார். இன்று அதிகாலை சென்னையில் இருந்து தாய் ஏர்லைன்ஸ் மூலம் பாங்காங் புறப்பட்ட சிம்புவின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா மட்டும் வேண்டவே வேண்டாம்..! அவமானப்படுத்திய ஹீரோ... காத்திருந்து பழி தீர்த்த லேடி சூப்பர் ஸ்டார்!

சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்ட நிலையில், இதில் நடிகர் சிம்பு இரண்டு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் வரலாற்று கதைகளத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்காக அதிக மெனக்கடலுடன் நடித்து வரும் சிம்புவின் தோற்றத்தை முழுமையாக மாற்றுவதற்காக சிம்பு கடின முயற்சி செய்து வருவதாகவும் இதற்காகவே வெளிநாட்டுக்கு சென்று வருவதாகவும் கூறப்படுகிறது

click me!