Relationship Tips : உங்கள் உறவை நீங்கள் சேதப்படுத்துகிறீர்கள் என்பதற்கான அறிகுறிகள் இவை தான்..

First Published Apr 12, 2024, 4:31 PM IST

உங்கள் உறவை நீங்கள் சேதப்படுத்துகிறீர்கள் என்பதற்கான அறிகுறிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பெரும்பாலும் நீங்கள் நடத்தை முறைகள் மற்றும் நீங்கள் செய்யும் செயல்கள் ஆகியவை உறவுக்கு தீங்கு விளைவிக்கும் என்று உங்களுக்கு தெரியுமா? ஆம். உண்மை தான்.. தவறு செய்கிறோம் என்று தெரியாமலே பலர் இதனை செய்யலாம். ஒரு உறவில் நாம் சிந்திக்கும் மற்றும் நடந்து கொள்ளும் விதம், ஒருவரையொருவர் புரிந்து கொள்ளும் விதம் மற்றும் நாம் தொடர்பு கொள்ளும் விதம் மற்றும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதம் ஆகியவை உறவின் ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே உங்கள் உறவை நீங்கள் சேதப்படுத்துகிறீர்கள் என்பதற்கான அறிகுறிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

உறவுகளைப் பற்றி நம்மை விட முற்றிலும் மாறுபட்ட பார்வை கொண்ட ஒரு துணையுடன் நீங்கள் வாழும் போது, முதலில் எந்த பிரச்சனையும் இருக்காது. ஆனால் இறுதியில், அது மோதல்களிலும் பிரிவிலும் முடியும். நீங்கள் ஒருவருக்கொருவர் இணக்கமாக இருக்கிறீர்களா என்பதை அறிய, உறவின் ஆரம்ப கட்டத்தில் கடினமான உரையாடல்களை நடத்துவது முக்கியம்.

உறவில் தம்பதிகள் தங்களுக்குள் ஆரோக்கியமான சில எல்லைகளை வகுக்க வேண்டும். அதே போல் இந்த எல்லைகளை பரஸ்பரம் மதிப்பதும் முக்கியம். இதன் மூலம் உறவில் புரிதலை வலுப்படுத்த முடியும்.

திருமண உறவில் வெளிப்படை தன்மை மிகவும் முக்கியம். எந்த ஒரு ரகசியத்தையும் வைத்திருக்க கூடாது. நீங்கள் ஏதேனும் ரகசியத்தை வைத்திருக்கும் போது, நீங்கள் உங்கள் துணையை மதிக்கவில்லை என்று அவர்கள் நினைத்துக் கொள்வார்கள். இது அவர்களை உணர்ச்சி ரீதியாக பாதிக்கலாம். நமது துணை மற்றும் உறவுக்கு முன்னுரிமை கொடுக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

எல்லா சிறிய விஷயங்களையும் கவனிக்கவும் புகார் செய்யவும் தேவையில்லை. உங்கள் துணை செய்யும் சிறு சிறு தவறுகளை குறிப்பிட்டு குறை கூறிக் கொண்டே இருந்தால் அது மோதலை உருவாக்கும். உறவில் எதிர்மறையான இடத்தை உருவாக்குகிறோம். சிறிய விஷயங்களை பெரிதாக பேச வேண்டிய அவசியமில்லை.

click me!