நாள்தோறும் ஓயாத சண்டை; தாயின் மூன்றாவது காதல் கணவனை கல்லால் அடித்து கொன்ற சிறுவன் - திருச்சியில் பரபரப்பு

By Velmurugan s  |  First Published May 10, 2024, 1:51 PM IST

திருச்சியில் நள்ளிரவில் தாயின் மூன்றாவது கணவனை, கல்லால் சரமாரியாக அடித்து படுகொலை செய்த, 17 வயது சிறுவன் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.


திருச்சி இபி சாலை கருவாட்டுப் பேட்டையைச் சேர்ந்தவர் பரணி என்கிற பரணி குமார் (வயது 28). சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது கோட்டை காவல் நிலையம், காந்தி மார்க்கெட் காவல் நிலையங்களில், திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கும், திருச்சி கோட்டை ரயில் நிலையம் குட்ஷெட் பகுதியைச் சேர்ந்த மதன் என்பவருடைய மனைவி ஜோதி என்பவருக்கும், தகாத உறவு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. ஜோதிக்கு (45), பரணிக்குமார் 3வது கணவன் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், வழக்கு ஒன்றில் சிக்கி சிறையில் இருந்த பரணிக்குமார், கடந்த மார்ச் மாதம் சிறையில் இருந்து திரும்பியுள்ளார். அன்று முதல், பரணிகுமாருக்கும், ஜோதிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

2 வருசம் உருகி உருகி காதலிச்சிட்டு இப்போ அவ பின்னாடி சுத்துறியா? காதலனுக்கு தீ வைத்துவிட்டு இளம்பெண் தற்கொலை முயற்சி

இந்நிலையில் , வழக்கம்போல் இருவருக்கும் நேற்று இரவு, 11 மணியளவில் தகராறு நடந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த பரணிக்குமார் ஜோதியை அடித்து, உதைத்துள்ளார். இதனைக் கண்ட ஜோதியின் 17 வயது மகன் மற்றும் அவனது நண்பன் பீமநகரை சேர்ந்த டோலு என்கிற முகமது தெளபீக் (வயது 19) ஆகிய இருவரும் சேர்ந்து, சிங்காரத் தோப்பு அருகே நின்றிருந்த பரணிக்குமாரிடம் தகராறில் ஈடுபட்டனர்.

Suicide: தேனியில் பொதுத்தேர்வில் 494 மதிப்பெண் எடுத்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை

பரணிக்குமார் இவர்களை சரமாரியாக தாக்கவே, ஆத்திரமடைந்த இருவரும் தங்களது கையில் வைத்திருந்த கல்லால் அவரது தலையில் சரமாரியாக தாக்கினர். மேலும், கத்தியால் குத்தியதாலும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரணிக்குமார் துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த கோட்டை காவல் நிலைய போலீசார், பரணிக்குமார் உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி  மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், கொலை செய்து தப்பியோடிய சிறுவன், டோலு ஆகிய இருவரையும், கைது செய்தனர். இவர்கள் இருவரின் மீதும், திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

click me!