சினிமாவில் டாப் ஹீரோயினாக இருக்கும் இவங்கெல்லாம் டாக்டருக்கு படிச்சவங்களா..! இவ்ளோ நாளா இதுதெரியாம போச்சே

First Published Apr 13, 2024, 12:27 PM IST

மருத்துவம் படித்துவிட்டு சினிமா மீதுள்ள மோகத்தில் நடிக்க வந்து தற்போது டாப் ஹீரோயின்களாக வலம் வரும் நடிகைகள் பற்றி பார்க்கலாம்.

சாய் பல்லவி (Sai Pallavi)

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் டாப் ஹீரோயினாக கலக்கிக் கொண்டிருப்பவர் சாய் பல்லவி. தமிழ்நாட்டை சேர்ந்த இவர் ஜார்ஜியாவில் மருத்துவம் படித்தார். மருத்துவ படிப்பை முடித்த கையோடு மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவர், அப்படம் ஹிட் ஆனதால் முழுநேர நடிகையாக மாறிவிட்டார். அவர் நடிப்பில் தற்போது தமிழில் அமரன் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் சாய் பல்லவி.

அதிதி ஷங்கர் (Aditi Shankar)

இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கரும் டாக்டருக்கு படித்தவர் தான். மருத்துவம் படித்தாலும் சினிமாவின் மீது கொண்ட ஆர்வத்தால், படித்து முடித்த கையோடு நடிகையாகிவிட்டார் அதிதி. கார்த்தியின் விருமன் படம் மூலம் எண்ட்ரி கொடுத்த அதிதி, அடுத்ததாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் திரைப்படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் ஹிட் ஆன நிலையில், தற்போது அவர் விஷ்ணு வர்தன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்... Dhanush : தனுஷ் என்னோட புள்ள-னு உரிமை கொண்டாடி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த கதிரேசன் உயிரிழப்பு

ஸ்ரீலீலா (Sreeleela)

டோலிவுட்டில் தற்போது டிரெண்ட்டிங்கில் இருப்பவர் தான் ஸ்ரீலீலா. கடந்த மூன்று ஆண்டுகளில் அசுர வளர்ச்சி அடைந்துள்ள ஸ்ரீலீலா, கிளாமர் மற்றும் ஹோம்லி வேடங்கள் இரண்டிலும் புகுந்து விளையாடி வருகிறார். குறுகிய காலத்தில் பாலய்யா, பவன் கல்யாண், மகேஷ் பாபு என டோலிவுட்டின் டாப் ஸ்டார்களுடன் நடித்துவிட்ட ஸ்ரீலீலா தற்போது கைவசம் அரை டஜன் படங்களுடன் டோலிவுட்டில் டாப் ஹீரோயினாக ஆதிக்கம் செலுத்து வருகிறார். இவரும் டாக்டருக்கு படித்தவர் தான்.

ஷிவானி ராஜசேகர் (Shivani Rajashekar)

தெலுங்கு நடிகரும், மருத்துவருமான ராஜசேகரின் மகள் தான் ஷிவானி. இவரும் தன் தந்தையை போலவே மருத்துவம் படித்துவிட்டு சினிமாவுக்குள் நுழைந்துவிட்டார். தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் ஷிவானி, தமிழிலும் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக அன்பறிவு, உதயநிதி ஸ்டாலினின் நெஞ்சுக்கு நீதி போன்ற படங்களில் நடித்திருக்கிறார். தற்போது தெலுங்கில் செம்ம பிசியான ஹீரோயினாக வலம் வருகிறார் ஷிவானி.

இதையும் படியுங்கள்... கோவில் திருவிழாவில் குத்தாட்டம் போட்ட நடிகை லட்சுமி மேனன்... செல்பி எடுக்க ரசிகர்கள் குவிந்ததால் தள்ளுமுள்ளு

click me!