அதுக்கு நான் கேரண்டி – கண்டிப்பா அபிஷேக் சர்மா இந்திய அணியில் இடம் பெறுவார் - ரோகன் கவாஸ்கர்!

First Published May 20, 2024, 4:35 PM IST

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் மூலமாக இந்திய அணியில் இளம் வீரரான அபிஷேக் சர்மா இடம் பெறுவார் என்ற நம்பிக்கை இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ரோகன் கவாஸ்கர் கூறியுள்ளார்.

Abhishek Sharma

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் முடிந்து பிளே ஆஃப் சுற்று போட்டிகள் தொடங்க இருக்கிறது. இதில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பிளே ஆஃப் சுற்றில் இடம் பெற்றுள்ளன. ஐபிஎல் கிரிக்கெட்டைத் தொடர்ந்து டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது.

Abhishek Sharma

இந்த தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரரான அபிஷேக் சர்மா இடம் பெறவில்லை. டி20 உலகக் கோப்பை தொடரைத் தொடர்ந்து ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடரின் மூலமாக இந்திய அணியில் அபிஷேக் சர்மா அறிமுகம் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ரோகன் கவாஸ்கர் கூறியுள்ளார்.

Latest Videos


Abhishek Sharma

இது குறித்து ரோகன் கவாஸ்கர் கூறியிருப்பதாவது: “ஜிம்பாப்வேக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் அபிஷேக் சர்மா இந்திய அணியில் அறிமுகமாவார் என்று என்னால் உத்தரவாதம் அளிக்க முடியும். இந்த தொடரில் டி20 உலகக் கோப்பைக்கு பிறகு தொடங்கப்படும். இதில், அபிஷேக் சர்மா இடம் பெற்று, ஜிம்பாப்வேயில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதை நீங்கள் காண்பீர்கள், என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Abhishek Sharma

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்ற அபிஷேக் சர்மா 13 போட்டிகளில் விளையாடி 467 ரன்கள் குவித்துள்ளார். இதில், 3 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 75 ரன்கள் எடுத்துள்ளார்.

Abhishek Sharma

கடைசியாக நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான 69ஆவது லீக் போட்டியில் அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 5 பவுண்டரி, 6 சிக்ஸர் உள்பட 66 ரன்கள் குவித்தார். இந்தப் போட்டியில் ஹைதராபாத் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்திற்கு சன்ரைசர்ஸ் முன்னேறியது.

click me!