உடல் உழைப்பு இல்லாத வேலைகள் பெருகிவிட்ட நிலையில் தற்போது, அதிக எடை என்பது ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அதிக எடையால் அவதிப்படுகின்றனர்.
அதிக எடை இருப்பது ஒரு உடல்நலப் பிரச்சினையாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் இது நீரிழிவு நோய் முதல் மாரடைப்பு வரை பல நோய்களை உருவாக்கும்.
உடல் எடையை குறைக்க, நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்வதும், சரியான உணவுகளை உண்பதும் மிகவும் முக்கியம். இவை ஆரோக்கியமாகவும், உடல் எடையை குறைக்கவும் உதவும்.