Vettaiyan Movie
பிரபல இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் கடந்த 2023ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் "ஜெயிலர்". உலக அளவில் இந்த திரைப்படம் சுமார் 640 கோடி ரூபாய் வசூல் செய்து மெகா ஹிட் திரைப்படமாக மாறியது. மேலும் இந்த திரைப்படம் வெளியான வெகு சில நாட்களில் தனது இமயமலை பயணத்தை மேற்கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
வெளிநாடுகளுக்கும் சுற்றுலா மேற்கொண்ட அவர், அதை முடித்துக்கொண்டு பிரபல இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் "வேட்டையன்" என்கின்ற திரைப்படத்தில் நடிக்க தொடங்கினார். ஏற்கனவே பிரபல நடிகர் சூர்யாவின் "ஜெய் பீம்" திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றவர் ஞானவேல் என்பது குறிப்பிடத்தக்கது. துவக்கத்திலேயே இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு காவல்துறை அதிகாரியாக நடித்த இருப்பதாக தகவல்கள் வெளியானது.
அத்தானை இம்சிக்கும் கார்த்தி.. கலகலப்பாக வெளியான கார்த்தியின் "மெய்யழகன் பட கிளர்வோட்டம்"
Amitabh Bachchan
வேட்டையின் திரைப்படத்தில் பல சிறப்புகள் உள்ள நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் முதல் முறையாக தமிழ் திரையுலகில் இந்த வேட்டையன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த திரைப்படத்தில் அவர் ஒரு நீதிபதியாக நடித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
சுமார் 33 ஆண்டுகள் கழித்து ரஜினிகாந்த் மற்றும் அமிதாபச்சன் ஆகிய இருவரும் இந்த திரைப்படத்தில் இணைந்து நடித்திருக்கின்றனர். அது மட்டும் அல்லாமல் பல முன்னணி நடிகர் நடிகைகளும் ரஜினியின் வேட்டையன் திரைப்படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வருகின்ற அக்டோபர் 10ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
Manasilaayo First Single
இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த 9 மாதங்களாக நடந்து வந்த நிலையில், அண்மையில் தான் தனது டப்பிங் பணிகளை முடித்தார் ரஜினிகாந்த். இன்னும் வேட்டையன் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகாத நிலையில், அந்த திரைப்படத்திலிருந்து முதல் சிங்கிள் பாடல் ஒன்று விரைவில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே ஜெயிலர் திரைப்படத்திற்கு இசையமைத்து அதை மெகா ஹிட் ஆக மாற்றிய ராக்ஸ்டார் அனிருத் தான் இந்த வேட்டையன் திரைப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் வருகின்ற செப்டம்பர் 9ம் தேதி திங்கட்கிழமை வேட்டையன் திரைப்படத்திலிருந்து Manasilayoo என்கின்ற முதல் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது.
கங்குவா.. "ரிலீஸ் தேதி மாற காரணமே ஞானவேல் தான்" - தயாரிப்பாளர் தனஞ்செயன் கொடுத்த விளக்கம்!
rajini and suriya
வேட்டையன் திரைப்படத்தோடு இணைந்து சூர்யாவின் கங்குவா திரைப்படமும் வருகின்ற அக்டோபர் மாதம் 10ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மூத்த நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு வழிவிட்டு, அதே தேதியில் தங்களது கங்குவா திரைப்படம் வெளியாகாது என்றும், அதன் வெளியிட்டு தேதி ஒத்திவைக்கப்படுவதாகவும் அண்மையில் நடிகர் சூர்யாவும் அப்பட தயாரிப்பாளரான ஞானவேல் ராஜாவும் அறிவித்திருந்தனர்.
இதனை அடுத்து வருகின்ற அக்டோபர் மாதம் 10ஆம் தேதி சோலோவாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் உலக அளவில் வெளியாக உள்ளது. இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
கங்குவா.. "ரிலீஸ் தேதி மாற காரணமே ஞானவேல் தான்" - தயாரிப்பாளர் தனஞ்செயன் கொடுத்த விளக்கம்!