டாப் நடிகரின் படத்தில் ஆசையாக நடித்து மோசம் போன நக்மா! கவர்ச்சி நடிகையால் ஃபீல்ட் அவுட் ஆன சோகம்!

First Published Sep 7, 2024, 5:35 PM IST

80-களில் கவர்ச்சி ரோல்களில் நடித்து பிரபலமான ஒரு நடிகை தான், நடிகை நக்மா டோட்டலாக சினிமாவை விட்டே விலக காரணம் என்றால் நம்புவீர்களா? சரி இதுகுறித்து இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்.
 

Actress nagma and Ganguly

மும்பையை சேர்ந்த நடிகை நக்மா திரைத்துறைக்குள் நுழைய முக்கிய காரணமாக இருந்தவர், நக்மாவின் அம்மா தான். நக்மாவுக்கு பெற்றோர் வைத்த பெயர் நந்திதா மொரார்ஜி. நக்மாவின் தாயார் ஷாமா காஸி , குஜராத்தை சேர்ந்த மிகப்பெரிய தொழிலதிபரான ஸ்ரீ அரவிந்த் பிரதாப்சின்ஹா மொரார்ஜி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  நக்மா பிறந்த பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், மகள் நக்மாவை தூக்கி கொண்டு வீட்டை விட்டு வெளியேறி, பெற்றோருடன் வாழ துவங்கினர் ஷாமா. பின்னர் ஸீமா சந்தர் சதானா என்கிற தயாரிப்பாளரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.  நக்மாவுக்கு பின்னர், ஷாமா காஸி-க்கு ஜோதிகா, ரோஷ்ணி மற்றும் ஒரு மகன் பிறந்தார். 

politician nagma

ஷாமாவின் இரண்டாவது கணவர் சந்தர் சதானா ஒரு தயாரிப்பாளர் என்பதால், அவரின் செல்வாக்கால் நக்மாவுக்கு முதல் படமே சல்மான் கானுடன். Baagi என்கிற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படம் வெற்றிப்படமாக அமைந்ததால், அடுத்தத படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். ஹிந்தியை தொடர்ந்து தெலுங்கிலும் நாகார்ஜுனா, சிரஞ்சீவி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தார். 1990-ஆம் ஆண்டு நடிக்க துவங்கிய நக்மா, ஹிந்தி மற்றும் தெலுங்கில் டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்ததால்... தமிழ் ரசிகர்களின் கண் இவர் மீது பட சுமார் 4 வருடங்கள் ஆனது.

விலை உயர்ந்த நிச்சயதார்த்த வைர மோதிரத்தோடு சோபிதா வெளியிட்ட போட்டோஸ்! சைதன்யா கொடுத்த ரியாக்ஷன்!

Latest Videos


Jyothika and Nagma

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில்,1994 ஆம் ஆண்டு பிரபு தேவா நடிப்பில் வெளியான 'காதலன்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் நக்மா. இப்படம் இளவட்ட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் இடம்பெற்ற பாடல்களும் சூப்பர்.. டூப்பர் ஹிட் அடித்தது.  முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நக்மாவிற்கு பிலிம்பேர் விருதும் கிடைத்தது. 
 

Nagma

மற்ற மொழிகளில் நடித்தாலும், தமிழிலும் அவ்வப்போது தலைகாட்டி வந்த நக்மா... சத்யராஜுடன் வில்லாதி வில்லன், பிரபு தேவாவுக்கு ஜோடியாக லவ் பேர்ட்ஸ், கார்த்திக்கு ஜோடியாக மேட்டுக்குடி, பிஸ்தா என பல ஹிட் படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகையாக உருவெடுத்தார். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக இவர் நடித்த 'பாட்ஷா'  திரைப்படம், நக்மாவை டாப் ஸ்டார் நாயகியாக மாற்றியது. இந்த திரைப்படம் திரையரங்கில்.. சுமார் 1 வருடம் வரை ஓடியது குறிப்பிடத்தக்கது. எப்படி தலைவருக்கு போஸ்டர் ஒட்டி ரசிகர்கள் கொண்டாடினார்களோ... அதே போல் நக்மாவுக்கு போஸ்டர் ஒட்டினர்.

2-ஆவது நாளே வசூலில் 43% சரிவை சந்தித்த 'கோட்'! 'ஜெயிலர்' வசூலை நெருங்க முடியாமல் திணறும் தளபதி!

Nagma

தமிழ் சினிமாவில் ராசியான நடிகை என பெயரெடுத்த நக்மா... காதல் சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லாதவர். ஆரம்பத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியுடன் காதலில் கிசுகிசுக்கப்பட்டார். இருவரும் உயிருக்கு உயிராக பழகி வந்த நிலையில், சில காரணங்களால் இந்த காதல் தோல்வியில் முடிந்தது. இதை தொடர்ந்து மூத்த நடிகர் ஒருவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்த நக்மா, பின்னர் அவரிடம் இருந்தும் பிரிந்தார். இது போன்ற காதல் சர்ச்சைகளால் தன்னுடைய சினிமா கேரியரை கோட்டை விட்ட நக்மா, தமிழில் ஃபீல்ட் அவுட் ஆக காரணம் கூட பிரபல கவர்ச்சி நடிகை என்றே கூறப்படுகிறது.

Nagma

நக்மா முன்னணி ஹீரோயின் என்கிற இமேஜில் இருந்தாலும், வயது கூடியதால் குணச்சித்திர கதாபாத்திரங்கள் நடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.  எனினும் தனக்கு பொருந்தக் கூடிய வேடங்களையே தேர்வு செய்து நடித்தார் அம்மணி. சிறந்த Come back படத்திற்காக காத்திருந்த நக்மாவுக்கு இயக்குனர் சரவண சுப்பையா அஜித்தை வைத்து இயக்கிய சிட்டிசன் படத்தில், சிபிஐ ஆபீசர் ரோல் கிடைத்துள்ளது. முன்னணி நடிகர் படம் என்பதால், எப்படியும் தன்னுடைய நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்படும் என நம்பினார்.  இது ஒரு கம்பீரமான இன்வெஸ்டிகேடிங் ஆபீசர் ரோல் என்பதால், நக்மாவின் குரலுக்கு கூடுதல் கவனம் செலுத்தியது படக்குழு. இதற்க்கு முன் நக்மாவின் படங்களுக்கு குரல் கொடுத்து வந்த சரிதாவை மாற்றிவிட்டு,  சிபிஐ ஆபிஸர் குரல் கம்பீரமாக இருக்க வேண்டும் என பிரபல கவர்ச்சி நடிகை ஒருவரின் குரலை தான் இந்த படத்தில் பயன்படுத்தினார்களாம்.

அஜித்துக்காக ஏ.ஆர்.ரகுமான் பாடலை காப்பியடித்த தேவா! சூப்பர்.. டூப்பர் ஹிட் அடித்த ரொமான்டிக் சாங் எது தெரியுமா

dancer anuradha

அந்த கவர்ச்சி நடிகையின் குரலிலேயே படம் ரிலீசானது. ஆனால் படத்தில் நாகமாவின் குரல் ஆண் குரலைப் போல் ஒலித்ததாக பலரும் விமர்சித்தனர். சுத்தமாக எடுபடாமல் போனது மட்டும் இன்றி...நக்மா மேலிருந்த காதலன் அழகி இமேஜும் காணாமல் போனது. அது வரை சேர்த்து வைத்திருந்த நாயகி இமேஜும் தகர்ந்து மும்பைக்கு ஒரேயடியாக பொட்டியை காட்டினார் நக்மா. நக்மாவுக்கு ஆண் குரல் போல் கொடுத்து, காலி பண்ணியது வேறு யாரும் அல்ல நடிகை அனுராதா தான். இந்த படமே... நக்மா நடித்த கடைசி தமிழ் அப்படம் ஆகும். பின்னர் அரசியலில் கால் பதித்து, தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார் நடிகை நக்மா என்பது குறிப்பிடத்தக்கது.

click me!