
தமிழ் சினிமாவில் தற்பொழுது முன்னணி நடிகராக விளங்கி வரும் சூர்யா, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் தனது கடின உழைப்பை "கங்குவா" திரைப்படத்திற்காக கொடுத்திருக்கிறார் என்றால் அது மிகையல்ல. ஆயிரக்கணக்கான ஊழியர்களின் உழைப்பில், தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத புதியதொரு கதைகலத்தை இந்த திரைப்படத்தின் மூலம் கூற வருகிறார் பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு, பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே இந்த திரைப்படத்தில் இருந்து பல முக்கிய அப்டேட்கள் வெளியான நிலையில், வருகின்ற அக்டோபர் மாதம் 10ம் தேதி திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியானது. நடிகர் சூர்யாவின் திரை வரலாற்றிலேயே சுமார் 500 கோடியை தாண்டி மெகா பட்ஜெட்டில் உருவாகும் முதல் திரைப்படமும் இது என்பது அனைவரும் அறிந்ததே. அது மட்டுமில்லாமல் உலக அளவில் சுமார் 38 மொழிகளில் இந்த திரைப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
வட மாநிலங்களில் முதல் முறையாக மல்டிபிளக்ஸில் வெளியாக உள்ள முதல் தமிழ் திரைப்படமாக கங்குவா மாற உள்ளதாகவும், இதுதான் உண்மையான பான் இந்தியா திரைப்படம் என்றும் கடந்த சில வாரங்களாகவே அப்பட குழுவினர் அறிவித்து வருகின்றனர்.
டாப் நடிகரின் படத்தில் ஆசையாக நடித்து மோசம் போன நக்மா! கவர்ச்சி நடிகையால் ஃபீல்ட் அவுட் ஆன சோகம்!
இந்த சூழலில் நான் "வேட்டையன்" திரைப்பட பணிகளை முடித்த ரஜினிகாந்த், தன்னுடைய ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டார். அப்பொழுது ஒரு மத குருமாரிடம் பேசிய அவர், "வேட்டையன்" திரைப்படம் பற்றியும் பேசினார். சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை விடுமுறையில் தனது "வேட்டையன்" திரைப்படம் வெளியாக உள்ளதாகவும் அப்போதே அவர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ரஜினியின் படம் அக்டோபர் மாதத்தின் 2ம் வாரத்தில் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக பேசப்பட்டது.
இறுதியில் "கங்குவா" திரைப்படம் வெளியாகும் அதே அக்டோபர் 10ம் தேதி "வேட்டையன்" திரைப்படமும் வெளியாகும் என்கின்ற அதிகாரப்பூர் அறிவிப்புகள் வெளியானது. இவ்வாண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரு மாபெரும் திரைப்படங்கள் ஒரே நாளில் மோதுவது ரஜினிகாந்த் மற்றும் சூர்யா ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. அது மட்டும் அல்லாமல் முதல் முறையாக சூர்யா மற்றும் ரஜினிகாந்த் திரைப்படங்கள் ஒரே நாளில் நேருக்கு நேர் மோத உள்ளதும் பெரும் விஷயமாக பார்க்கப்பட்டது.
இதற்கு முன்னதாக ரஜினிகாந்தின் "அண்ணாத்த" மற்றும் சூர்யாவின் "ஜெய் பீம்" திரைப்படங்கள் ஒரே வாரத்தில் வெளியாகி மோதிக்கொண்டது. இதில் சுவாரசியம் என்னவென்றால் அப்போது "அண்ணாத்த" திரைப்படத்தை இயக்கியிருந்தது சிறுத்தை சிவா, மற்றும் சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கியிருந்தது டிஜே ஞானவேல்.
இந்த சூழலில் தான் தனது தம்பி கார்த்தியின் "மெய்யழகன்" இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சூர்யா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாம் குழந்தையாக இருந்த போதே தமிழ் சினிமாவின் அடையாளமாக திகழ்ந்தவர். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த திரையுலகில் பயணித்து வரும் மிகப்பெரிய நடிகர். ஆகையால் அவரோடு நமது திரைப்படத்தை களம் இறக்குவது ஏற்புடையதாக இருக்காது.
கங்குவா என்பது ஒரு அழகிய குழந்தை, அது பிறக்கும் பொழுது நாம் அனைவரும் அதை கொண்டாட வேண்டும். சுமார் இரண்டரை வருடங்களுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான ஊழியர்கள் இந்த திரைப்படத்திற்காக இரவு பகல் பாராமல் உழைத்திருக்கின்றனர். அவர்களுடைய உழைப்பு ஒரு சதவீதம் கூட வீணாகி விடக்கூடாது.
அந்த ஒரு காரணத்திற்காக தான் வேட்டையன் திரைப்படம் வெளியாகும் அதே நாளில் நமது கங்குவா திரைப்படம் வெளியிட வேண்டாம் என்று எண்ணினோம். ஆனால் விரைவில் கங்குவா திரைப்படம் வெளியாகி உங்கள் அனைவருடைய பார்வைக்கும் விருந்தாகும் என்று பேசி இருந்தார்.
இந்நிலையில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் உரிமையாளர் பிரபல தயாரிப்பாளர் தனஜெயன் வெளியிட்ட தகவலின்படி. கங்குவா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற முழுக்க முழுக்க காரணம் ஞானவேல் ராஜா தான். காரணம் அவர் சூப்பர் ஸ்டாரின் வெறித்தனமான ஒரு ரசிகர், அவரை தெய்வமாக வணங்கும் அளவிற்கு பாசமும் நேசமும் கொண்டவர்.
ஆகையால் தனது தலைவரின் திரைப்படம் வெளியாகும் நாளில் தன்னுடைய திரைப்படமும் வெளியானால் பிற்காலத்தில் அது பெரிய அளவில் தவறாக பேசப்படும், அது மட்டும் அல்லாமல் கங்குவா மிகப்பெரிய வசூலை பெற வேண்டிய ஒரு திரைப்படம், ஆகையால் அதை தனியாக வெளியிடுவது தான் ஏற்புடைய விஷயமாக இருக்கும் என்று ஞானவேல் கருதினார். அதற்கான பணிகளை முழு வீச்சில் செய்தார், அதை இப்போது சாதித்தும் காட்டி இருக்கிறார். விரைவில் தனியாக கங்குவா திரைப்படம் வெளியாகும் அதற்கான தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியிருக்கிறார் தனஞ்செயன்.
விலை உயர்ந்த நிச்சயதார்த்த வைர மோதிரத்தோடு சோபிதா வெளியிட்ட போட்டோஸ்! சைதன்யா கொடுத்த ரியாக்ஷன்!