முதல் நாள் உலக அளவில் சுமார் 126.23 கோடி வசூல் செய்த "கோட்" திரைப்படம், இரண்டாவது நாளில் மிகப்பெரிய சரிவை சந்தித்திருக்கிறது என்று கூறப்படுகிறது. வார இறுதி நாட்கள் நாளையுடன் முடியவுள்ள நிலையில், கோட் திரைப்படம் ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபிஸை தொடுமா என்கின்ற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது என்றே கூறலாம். உலக அளவில் ஆன வசூல் ஒருபுறம் இருக்க, தொடர்ச்சியாக கோட் திரைப்படம் குறித்த பல சுவாரசியமான சம்பவங்களை ஒன்றன் பின் ஒன்றாக வெளியிட்டு வருகிறார் வெங்கட் பிரபு.
அதன் ஒரு பகுதியாக பிரபல நடிகை சங்கீதா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய இயக்குனர் பிரபு, திரைப்படத்தில் தளபதி விஜய் மற்றும் எஸ்.கே. ஆகிய இருவர் இடையே வரும் அந்த கட்சி குறித்து பேசியுள்ளார். "இந்த பில்டிங்கில் இருக்கும் அனைவரையும் காப்பாற்ற வேண்டும் சிவா, துப்பாக்கியை நீங்கள் கையில் வைத்துக் கொள்ளுங்கள். மோகன் தப்பித்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்" இது தான் நான் கொடுத்த வசனம்.
ஆனால் டேக்கில் அதை சுவாரசியமாக மாற்றியது தளபதி தான். உண்மையில் யாருக்கு அப்படி பேச மனசு வரும் என்று எனக்கு தெரியவில்லை. தளபதி, சிவா மீது உண்மையான அன்புகொண்டவர், சிவா ஒரு விஜயின் Fan Boy, அதனால் தான் அந்த கட்சி அவ்வளவு சுவாரசியமாக அமைந்தது.