'பொன்னியின் செல்வன்' பட நடிகை சோபிதாவுக்கும், சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவுக்கும் கடந்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், தன்னுடைய எங்கேஜ்மெண்ட் மோதிரத்தை வெளிப்படுத்தும் விதத்தில் சோபிதா வெளியிட்டுள்ள போட்டோஸ் மற்றும் அதற்க்கு சைதன்யா கொடுத்துள்ள ரியாக்ஷன் ரசிகர்கள் மத்தியில் கவனிக்கப்பட்டு வருகிறது.
டோலிவுட் திரையுலகின் கிங் என ரசிகர்களால் அழைக்கப்படும், நடிகர் நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யா... கடந்த 2017-ஆம் ஆண்டு பிரபல நடிகை சமந்தாவை சுமார் 7- வருடங்களுக்கு மேலாக உருகி உருகி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் நாக சைதன்யா குடும்ப வழக்கப்படி, இந்து முறைப்படியும்... சமந்தாவின் குடும்ப வழக்கப்படி கிருஸ்தவ முறைப்படியும் நடந்தது. இருவரும் முதல் முதலாக... சந்தித்து காதலை பரிமாறிக்கொண்ட கோவாவிலேயே திருமணம் செய்துகொண்டனர்.
27
Samantha Divorce
தென்னிந்திய திரையுலகமே மெச்சும் அளவுக்கு... நல்ல புரிதலுடன் வாழ்ந்து வந்த இவர்களின் திருமண வாழ்க்கை மீது யார் கண் பட்டதோ, நான்கு வருடத்திலேயே இருவரும் தங்களின் திருமண உறவை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்தனர். அதன்படி, 2021-ஆம் ஆண்டு இருவரும் அதிகார பூர்வமாக விவாகரத்து பெற்று பிரிவதை அறிவித்தனர். சமந்தா - சைதன்யா திருமண முறிவு... ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சைதன்யா தன்னுடைய சோகத்தை வெளிப்படுத்தி கொள்ளவில்லை என்றாலும்... சமந்தா இந்த பிரிவில் இருந்து வெளியே வர கடுமையாக முயன்றார்.
தன்னுடைய தோழிகளுடன் அதிக நேரம் செலவிட்டு வந்த சமந்தா... ஆன்மீகத்திலும் கவனம் செலுத்தினார். சமந்தா ஒரு கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்தவர் என்றாலும், சமீப காலமாக இந்து கடவுள்களை அதிகம் வழிபட்டு வருகிறார். திருமண முறிவுக்கு பின்னர்.. மயோசிட்டிஸ் பிரச்னையாலும் பாதிக்கப்பட்ட சமந்தா, எழுந்து நிற்க கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். இந்தியாவில் இவர் எடுத்துக்கொண்ட சிகிச்சைகள் எதுவும் பலன் தராத நிலையில், அமெரிக்கா சென்று பிரத்தேயேக சிகிச்சை எடுத்தார். அந்த பின்னரே சற்று உடல்நலம் தேறி இந்தியா திரும்பினார். சமந்தா சிகிச்சையில் இருக்கும் போது... நாக சைதன்யா அவரை பார்க்க சென்றதாக சில தகவல்கள் பரவிய நிலையில், பின்னர் அது முற்றிலும் வதந்தி என சமந்தா தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.
47
Sobhita Dhulipala And Naga Chaitanya Engagement
சமந்தா முன்னாள் கணவர் நாக சைதன்யா நினைப்பில் இருந்து வெளியேறி... தன்னுடைய திரைப்பட பணிகள் மற்றும் ஃபிட்னஸ் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தி வரும் சமந்தா, தற்போது வரை இரண்டாவது திருமணம் குறித்து எந்த ஒரு முடிவுக்கும் வரவில்லை என கூறப்படுகிறது. ஆனால் சமந்தாவின் முன்னாள் கணவரும் நடிகருமான நாக சைதன்யா, சமந்தாவை பிரிந்த வேகத்தில் பாலிவுட் நடிகை சோபிதாவுடன் டேட்டிங் செய்ய துவங்கி தற்போது திருமணத்திற்கு அச்சாரமே போட்டு விட்டார். அதன்படி சோபிதா துலிபாலாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் கடந்த மாதம் (ஆகஸ்ட் 8ஆம் தேதி) ஹைதராபாத்தில் நாகர்ஜூனாவின் வீட்டில் மிக பிரமாண்டமாக நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் இருதரப்பை சேர்ந்த, முக்கிய நபர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
நாக சைதன்யா மற்றும் சோபிதாவின் திருமண நிச்சயதார்த்தத்திற்கு பின்னர், சமந்தாவின் நண்பர்கள் சிலர் ஆதங்கத்தோடு போட்ட பதிவுகள் வைரலானது. இதை வைத்து பார்க்கும் போது, சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து பெற்று பிரிவதற்கு மூல காரணமே, சோபிதா தான் என்பது போல் தகவல்கள் வெளியாகின. ஆனால் சமந்தா தற்போது வரை இந்த விவகாரம் குறித்து வெளிப்படையாக பேசவில்லை.
67
Sobhita Dhulipala Engagement Dimond Ring
இந்நிலையில் சோபிதா துலிபாலா, மஞ்சள் மற்றும் கருப்பு நிற புடவையில் அதற்க்கு ஏற்ற போல் வித்தியாசமாக டிசைன் செய்யப்பட்ட நகைகள் அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இதில் நாக சைதன்யா திருமண நிச்சயதார்த்தத்தை போது, இவருக்கு அணிவித்த விலை உயர்ந்த மோதிரம் சோபிதா கைகளில் மின்னுவதை பார்க்க முடிகிறது. சோபிதாவின் இந்த புகைப்படங்களை பார்த்து, நாக சைதன்யா லைக் செய்து தன்னுடைய அன்பை வெளிப்படுத்தியுள்ளார். இவரது இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
சோபிதா மற்றும் நாக சைதன்யா திருமணம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இவர்களின் திருமணத்தை... ராமோஜி ராஜ் ஃபிலிம் சிட்டியில் நடத்த குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். திருமணத்திற்கு பின்னர் சோபிதாவின் ஆசை படி அவர் சினிமாவில் நடிக்க சைதன்யா குடும்பத்தில் கிரீன் சிக்னல் கொடுத்துள்ள நாகர்ஜுனா, சமந்தா விஷயத்தில் ஏற்பட்ட தவறு மீண்டும் தன்னுடைய மகன் வாழ்க்கையில் ஏற்பட கூடாது என்பதால்... இருவரையும் அழைத்து பேசி, சில நிபந்தனைகளை விதித்துள்ளாராம். இதற்கு சோபிதா ஒப்புக்கொண்ட பின்னரே திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.